யாழ் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜானதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள், காணாமல் போன உறவினர்களுக்கு உதவித்திட்டங்களை வழங்குவதாக தெரிவிக்கும் கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வருகின்ற போதும் காணாமல் போன தமது உறவுகள் எப்படியாவது கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் சாட்சியமளித்து வருகின்றனர்.
எனினும் அவர்களின் நம்பிக்கைக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் காணாமல் போனவர்களுக்கான மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறும் அதனை தொடர்ந்து வீட்டுத்திட்டம், சமூர்த்தி, கோழி வளர்ப்பு போன்ற உதவிகளை பெற்றுத்தருவதாக அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கருத்துக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
காணாமல் போன, கடத்தப்பட்டவர்களின் நிலை குறித்து அவர்களின் உறவினர்கள் உண்மையான நிலைப்பாடுகளை சாட்சியமளித்து வருகின்றனர்.
சாட்சியாளர்களை குழப்பும் வகையில் விசாரணைனைகள் மேற்கொண்டு வரும் அதிகாரிகள் உதவித்திட்டங்களை வழங்குவதாக கூறுவதை காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
எனவே காணாமல் போன,கடத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன? அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? அவர்களின் மீட்பு ஆகியனவையே தற்போது அந்த உறவுகளுக்கு தேவை.
அதற்கு மாறாக அவர்கள் எவ்வித உதவித்திட்டங்களையும் அரசாங்கத்திடம் கேட்கவில்லை.
எனவே காணாமல் போனவர்களை கண்டறியும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது மக்களின் சாட்சிங்களுக்கு எதிராக அவர்களை குழப்பும் வகையில், விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் நடந்து கொள்ளக்கூடாது.
தொடர்ந்தும் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை, விசாரணை என அந்த மக்களை துன்பப்படுத்தும் செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றதே தவிர அந்த மக்களுக்கு இது வரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.
எனவே காணாமல் போனவர்களின் உறவினர்கள் மரணச்சான்றிதழை பெற்றுக்கொண்டால் உதவித்திட்டம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறுவதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com
நான் ஒன்று கேட்கிறேன் நல்லா யோசிச்சி பதில் சொல்லுங்கே!!! முக்கிய தளபதிகளில் தீபன், துர்க்கா தவிர்த்து ஏன் யாரும் இறுதி யுத்தத்தில் போர் முன்னரங்க பகுதிகளில் இருந்து போர் புரியவில்லை??? தீபன், துர்க்கா கூட இரண்டு வருட போரில் இறுதி ஒருமாதத்தில்டான் புதுக்குடியிருப்பு தோல்விகர எதிர் தாக்குதல் நடத்தி சிக்குண்டு செத்தார்கள்!!!! பிரபாகரன் ஏன் இறுதிவரை போர் முன்னரங்குக்கு வந்து போராளிகளை உற்ச்சாக படுத்தவில்லை? பிரபாகரன் ஏன் இறுதிவரை தமிழ் ஈழ மக்களக்கு இறுதி போர் பற்றிய தன் விளக்க அல்லது மனவுறிதி படுத்த எந்த ஒரு உரையையும் நிகழ்த்தவில்லை??? ஏன் எந்த ஒரு தளபதியும் பிரபாகரன், சார்ல்ஸ் அந்தோணி, சூசை, பானு, ஜெயம் இன்னும் அநேகர் சைனட் அருந்தி வீர மரணம் எய்தவில்லை?? 18/5/2009 மற்றும் 19/5/2009 நாட்களில் காட்டபட்ட அனைத்து விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகள் சடலங்களும் இராணுவத்தினரின் சுற்றிவலைப்பில் சூடு பட்டு செத்த நிலையிலேயே உள்ளது!!! இதிலிருந்து என்ன தெரியுதுனா! அப்பாவி பொம்பள பிள்ளைகளை வழுக்கட்டாயமா பிடித்து தலை மயிரை நறுக்கி முறையான போர் பயிற்சி எதுவும் இல்லாமல் போர் முன்னரங்குக்கு அனுப்பி அநியாயமா பலி கொடுத்து! பொது மக்களை மனித கேடயமாக வைத்து கொண்டு(இதற்க்கு தகுந்த விடியோ அதரம் உள்ளது!) தாங்கள் மட்டும் பொண்டாட்டி பிள்ளைகளோடு பதுங்கு குழியில் பதுங்கிக்கொண்டு ஒரு வெளி நாட்டு வல்லரசின் துணையோடு நாட்டை விட்டு வெளியேற முயற்ச்சித்து கொண்டு இருந்தனர்! இறுதியில் அவர்கள் முயற்சி பலனளிக்காமல் போய், இராணுவத்திடம் சரண் அடைந்து மற்றும் சுற்றி வளைப்பில் சிக்குண்டு செத்தார்கள்!!!! இவர்கள் யாரும் வீர மரணம் அடையவில்லை!!! சைனட் அருந்தியும் சாகவில்லை!!! இறுதி நேரத்தில் பெரும் தற்கொலை தாக்குதல்களையும் நடத்தி சாகவும் இல்லை!!! இவர்களை கோழைகள் என்பதா, முறையாக திட்ட மிட்டு செயல்படவில்லை என்பதா!!! உலக நடப்பை சரியாக விளங்கி கொண்டு செயல்பட தெரியவில்லை என்பதா!!! அல்லது யார் பேச்சையும் கருத்தையும் கேட்காமல் (அன்டன் பால சிங்கம் உட்பட) முரட்டு முட்டாள் தான வீரத்தால் எதையும் சாதிக்கலாம் என்று எண்ணி எல்லோரும் மாண்டார்கள்!!! இவர்களால் ஈழத்தில் 300 000 அப்பாவி தமிழர்கள் இறந்தார்கள்!!! கிருஷ்துவ மதப் பரப்புனர்களை நன்றாக ஈழத்தில் கால் ஊன்றவிட்டு அவர்களுக்கு அதரவு அளித்து தமிழர்களில் ஈழ போருக்கு முன்பு 100 வெறும் 5% இருந்த கிருஸ்தவர்கள் இன்று கடுமையான கிருஸ்தவ மதப் பரப்புரைகளால் 100க்கு 40% வந்து விட்டனர் இன்றும் ஈழத்தில் மிக அதிகம் பேர் கிருஸ்தவர்கள் வெளிநாட்டு பணம் கொண்டு நடத்தும் பரப்புரைகளால் உதவி பொருட்களால் மதம் மாறி வருகின்றனர்!!! தமிழர் சாவதற்கும் மதம் மாறி போவதற்கும் மட்டுமே விடுதலை புலிகளின் போராட்டம் பெரும் காரணமாய் அமைந்துவிட்டது!!! பிரபாகரனும் கிருஸ்தவ மதத்திற்கு மாறினவர்தான் என்பதை எல்லோரும் இங்கு கவனத்தில் கொள்ளவும்!!!