ஏஜி: 1எம்டிபி, ரிம2.6பில்லியன் மீதான அறிக்கைகளைப் படிக்க அவசாசம் தேவை

time1எம்டிபி-இன்  முன்னாள்  துணை  நிறுவனமான  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  சென். பெர்ஹாட்  மீதும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  வழங்கப்பட்ட  ரிம2.6 பில்லியன்  மீதும்  தயாரித்து  வழங்கப்பட்டிருக்கும்  விசாரணை  அறிக்கைகளைப்  படித்துப்  பார்க்க  அவகாசம்  தேவை  எனச்  சட்டத்துறைத்  தலைவர்   முகம்மட் அபாண்டி  அலி கூறினார்.

அவ்விரண்டு  அறிக்கைகளையும்  கடந்த  ஆண்டு  இறுதியில்  எம்ஏசிசி  ஏஜி  அலுவலகத்திடம்  ஒப்படைத்தது.

அவை  பற்றி  அறிய  மலேசியாகினி  அபாண்டியைத்  தொடர்புகொண்டபோது,  “எனக்கு  அவகாசம்  தேவை”, என்று  அவர்  கூறினார்.

நஜிப்பின்  நன்கொடை விசயத்தில்  சட்டத்துறை  அலுவலகம் ஒரு  முடிவு  எடுக்குமா  என்று  வினவியதற்கு  முன்பு  சொன்ன  பதிலையே  திரும்பவும்  சொன்னார்.

“நான்தான்  சொன்னேனே,  எனக்கு  அவகாசம்  தேவை”.

முடிவெடுப்பதற்கு கெடு  நிர்ணயிக்கப்படுமா  என்று  வினவியதற்கு  அபாண்டி  பதிலளிக்கவில்லை.