காணமல் போனவர்கள் உயிரோடு இல்லை- ரணில் கருத்தால் மக்கள் கொந்தளிப்பு !

ranvikமகிந்த ஆட்சிக் கலாத்தில் காணமல் போன பல தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு ரகசிய தடுப்பு முகாமில் இன்றுவரை அடைக்கப்பட்டு இருக்கலாம். ஒரு நாள் அவர்கள் விடுதலையாகி வருவார்கள் என்று , அவர்களின் உறவினர்கள் நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார்கள். இதனால் காணமல் போனோர்களின் உறவினர்கள் பலர் இணைந்து ஒரு அமைப்பை கூட வைத்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் வடக்கிற்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு பெரும் குண்டைத் தூக்கி தமிழர்கள் தலையில் போட்டு உள்ளார்.

யுத்த வலையத்தில் மற்றும் பிற பகுதிகளில் காணமல் போனவர்கல் இனி உயிருடன் திரும்ப வாய்ப்பில்லை என்றது தான் அச்செய்தி ஆகும்.இதனால் வட கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் கடும் , ஆத்திரமடைந்துள்ளதாக யாழில் உள்ள அதிர்வின் நிருபர் தெரிவித்துள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: