தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்டவை எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பகுதிகள் அல்ல

mhதென்  தாய்லாந்தில்  கண்டெடுக்கப்பட்ட  சிதைந்த  பகுதிகள்  போயிங் 777  ரக  விமானத்தின்  பகுதிகள்  அல்ல என்பதால்  அவை  நிச்சயமாக  காணாமல்போன  மலேசிய  விமானமான  எம்எச்370-தின்  பகுதிகளாக  இருக்க  முடியாது.

சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை,  போக்குவரத்து  அமைச்சு,  மலேசிய  விமான  நிறுவனம்  ஆகியவற்றின்  நிபுணர்கள்  அதை  உறுதிப்படுத்தியுள்ளதாக  போக்குவரத்து  அமைச்சர்  லியோ  தியோங்  லாய்   தெரிவித்தார்.

“அவர்களின்  விவரமான  அறிக்கையின்படி  கண்டெடுக்கப்பட்ட  விமானப்  பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்  எண்கள்  போயிங்  விமானத்துக்கு  உரியவை  அல்ல  என்று  அவர்கள் திண்ணமாகக்  கூறுகிறார்கள்”,  என்றாரவர்.