எம்சிஎம்சி மேலும் நான்கு வலைத்தளங்களை முடக்கியது

maKLUMமலேசிய தொடர்ப்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) syedsoutsidethebox, tabunginsider,fotopages, Din Turtle ஆகிய நான்கு வலைத்தளங்களை முடக்கிப் போட்டிருக்கிறது.

இன்று காலையிலிருந்து அவ்வலைத்தளங்களுக்குள் செல்ல முடியவில்லை.

syedsoutsidethebox முடக்கப்படும் என்பதை சைட் அக்பர் அலி கடைசியாக இட்டிருந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தாபோங் இன்சைடர் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வலைத்தளம். அது பேங்க் நெகாரா அண்மையில் தாபோங் ஹாஜிக்கு அனுப்பியிருந்த எச்சரிக்கைக் கடிதத்தை வெளியிட்டிருந்தது.

ஆனால், மீனாக் ஜிங்கோவின் போட்டோ புளோக் ஏன் முடக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை.

Din Turtle மலாய் வட்டாரத்தில் பிரபலமான ஒரு வலைப்பதிவாளர். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் தீவிர ஆதரவாளரான அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கடுமையாகக் குறைகூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.