கெடா மந்திரி புசார் பதவியிலிருந்து விலகுமாறு கெடா அரசப் பேராளர் மன்றம் கேட்டுக்கொண்டதாக அரசாங்க- ஆதரவு ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் வெளிவந்த செய்திகளை முக்ரிஸ் மகாதிர் மறுத்தார்.
“கெடா அரசப் பேராளர் மன்றம் பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிடுமாறு என்னை நெருக்கியதாகவும், இரண்டு தடவை அவ்வாறு கேட்டுக்கொண்டதாகவும் நான் அதற்கு மறுத்து விட்டதாகவும் மைய நீரோட்ட ஊடகங்களிலும் நஜிப்- ஆதரவு வலைப்பதிவுகளிலும் கூறப்பட்டிருப்பது வெறும் பொய்”, என முக்ரிஸ் மகாதிர் அவரது முகநூல் பக்கத்தில் கூறினார்.