படிக்காதவர் எப்படி மந்திரி புசாராகலாம் என்று குறைகூறுவோருக்கு “அம்னோதான் என் பல்கலைக்கழகம்” எனப் பதில் கூறியுள்ளார் புதிய கெடா மந்திரி புசார் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபா.
22 வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று என பாஷா பெரித்தா ஹரியானுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார். தம் தந்தையார் காலமானதை அடுத்து அக்காள் ஒருவரையும் இளைய உடன்பிறப்புகள் மூவரையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தம்மை வந்து சேர்ந்தது என்றாரவர்.
“அவர்களின் படிப்பிலிருந்து திருமணம்வரை நான்தான் கவனித்துக் கொண்டேன். நான் 35-வது வயதில்தான் மணம் செய்து கொண்டேன்
“என் இளைய உடன்பிறப்புகள் எல்லாருமே உயர்க் கல்வி கற்றவர்கள். ஆனால், நான் பல்கலைக்கழகம் சென்றதில்லை. அதனாலென்ன, அவர்கள்தான் முக்கியம்”, என்றாரவர்.
பல்கலைக்கழகம் செல்லவில்லையே தவிர பல ஆண்டுகளாக கெடா அம்னோவில் இருந்தது போதுமான அனுபவத்தையும் தலைமைத்துவத் திறனையும் அவருக்குக் கொடுத்துள்ளது.
“தொடக்கக் காலத்தில் அம்னோவில் முக்கிய பதவி வகித்த என் தந்தையே எனக்குப் பலவற்றைக் கற்றுத் தந்தார். அவர் கெடா அம்னோவின் பொருளாளராக இருந்தார்.
“கெடா அரசியல் அரங்கில் நீண்ட காலமாக இருந்து வந்திருப்பவன் நான்”, என பாஷா கூறினார்.
ஓ அப்படியா? ஊழல், ஊதாரித்தனம், இனவாதம், அரசு பண கையாடல், நன்கொடைகள் என்ற பல பாடங்களில் உலகின் சிறந்த பல்கலைக்கழக மாச்சே அம்னோ. ஒரு செய்தி கேள்விப்பட்டேன், பங்களாதேச அதிபர் இடம் வாங்கிட்டாரம், ஓபாமா கூட அம்னோவில இடத்துக்கு விண்ணப்பிச்சி இருக்காராமே!! வாழ்க கெடா மக்கள்.
இனி நன்கொடையா வந்து கொட்ட போவுது.
அரசியலுக்கு படிப்பு முக்கியமல்ல. ‘பேக்’ நிறைய ‘துட்டு’ வைத்திருக்க வேண்டும். தலைவர்களுக்கு ‘பேக்’ தூக்க வேண்டும். தலைவர்களோடு சேர்ந்து ‘பேக்'[peg] ‘அடிக்க’ தெரியவேண்டும். ‘அல்லக்கை’ சிலரை வைத்துக்கொள்ள வேண்டும். எங்கெங்கு தலைவர்கள் போகிறார்களோ, அவர்களுக்கு முன்னமேயே அங்கே போய் நீங்கள் இருக்க வேண்டும். பெருநாட்களுக்கு பேனர்கள் போட்டு, அதிலே தலைவர்களுடன் உங்கள் புகைப்படைத்தையும் போட்டுக்கொள்ள வேண்டும். வீட்டிலே யாரவது ஒருவருடைய பிறந்தநாளை கொண்டாடும்போது, தலைவர்களை அழைத்து , அவர்களுக்கு ஆள் உயர மாலை போட வேண்டும். ‘சேவை’ என்று மக்களுக்காக உதவும் கெட்ட செயல்களை விட்டொழிக்கவேண்டும். ஏறினால் கார் [car] இறங்கினால் பார் [bar] என்கிற கொள்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தலைவர்களுக்கு பிடிக்காத எவருடனும் சேரவும் கூடாது, பேசவும் கூடாது. அடிக்கடி தலைவர்களின் வீட்டிற்கு செல்ல வேண்டும். போகும்போது மறக்காமல் தலைவர்கள் வீட்டு நாய்களுக்கோ, பூனைகளுக்கோ நிறைய சாப்பாடு வாங்கி கொண்டு செல்லவேண்டும். [அறுக்கிறேனா] இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.
மஞ்சு நன்றாகவே சொன்னீர்கள்.
சிங்கம், ம இ கா வை குத்தறமாதிரி இருக்கு , ஆமாய 30 வருசமா படிக்காத மேதை யுடன் தானையா அரசியல் நடத்தினோம் , அடியாட்களை வைத்து கொண்டு தமிழனை மிரட்டி உருட்டி சம்பாதிக்க வில்லையா, படிப்பு எதுக்கையா தமிழனை ஏய்க்க அடுக்கு மொழியும் அள்ளிவிட உம் தெரிந்தால் பத்தாதா !!!!!!
ஆகா ! சிங்கம் அவர்களே!! அற்புதம் ,அதிஅற்புதம் !! நீங்கள் சொல்லிய அந்த ஐடியாவை பாவித்து நானும் அரசியலில் குதிக்க போறேன் , அதன் மூலமாக அரசாங்க மானியம் பல கோடி வெள்ளி பெற்று , அறவாரியம் திறக்கபோறேன் , பெரிய பங்களா வீடு , பின்னால் நீச்சல் குளம் , பல வொப்பாட்டிக்கள், ஆகா , சும்மா சொல்லவே வாய் ஊருகிறது , ஊறுகாய் போட்ட மாதிரி !!!!!!!
Mr.s.maniam, நீங்கள் நினைப்பது போல எல்லா கட்சிகளிலும் உள்ளது. எப்போதும் நாம் ம.இ.கா. வையே உற்று நோக்குவதால், ம.இ.கா. மட்டுமே நம் கண் முன் வந்து நிற்கிறது. பி.கே ஆறிலும் இதே கதைதான். டி.எ.பி.யில் இன்னும் மோசம். ‘அப்பனும்’ ‘மவனும்’ கட்சிக்காக பாடுபட்ட, தியாகங்கள் புரிந்த இந்தியர்களை களைஎடுத்து விட்டார்கள். அரசியல் அறவே தெரியாத சீன இளைஞர்களுக்கு சீட். தெலுக் இந்தான் இடைத்தேர்தல் பார்த்தீங்கிள்ளே. அழகிய மலாய்ப் பெண்ணாம். அப்பனுக்கு எடுபிடி வேலை செஞ்சவலாம். நல்லா சிரிக்கிறா, ஆகவே வோட்டுப் போடுங்கோ என டி.எ.பி. காலரை தூக்கியது. அங்குள்ள மக்கள் வெச்சானுங்க ஆப்பு. அங்கிருந்த பழைய ஆள் மனோகரனுக்கே அந்த சீட் ஏன் கொடுக்கவில்லை? அவரை தூக்கி கேமரன் மலையிலே போட்டு, சிம்மாதிரியை அரசியல் கொலை செய்தது டி.எ.பி. மனோகரன் தெலுக் இந்தாநிலேயே எளிதாக வெற்றிக் கொண்டிருப்பார். அவரையும் கொன்று, சிம்மாதிரிக்கும் அல்வா கொடுத்து, இரண்டு இந்தியர்களை கொலை செய்தது டி.எ.பி.
எதிர் கட்சியானாலும் ஆளும் கட்சியானாலும் பினாங்கு முதல்வர் சீனன் தான் என்று டி எ பி சொன்னபோது கர்பால் சிங்கும் வாய் மூடி தானே இருந்தார் , எதிர் கட்சியிலும் ஆளும் கட்சியிலும் நமது நிலை “” பந்தியில் இடம் இல்லை என்றால் இலை ஓட்டை “”” என்பதுதான் ,
முள்ளமாரி முடிசெவிக்கி பாடத்தை பயிலும் இடம் உங்கள் பல்கலைகழகம்.அதனால்தான் நாடு இனவாத்தின் செயல்பாடுகளில் உள்ளது.
எதிர் கட்சியானாலும் ஆளும் கட்சியானாலும் பினாங்கு முதல்வர் சீனன் தான் என்று டி எ பி சொன்னபோது கர்பால் சிங்கும் வாய் மூடி தானே இருந்தார்
s .மணியம் i லைக் ட்
சிங்கம் முழுசும் எழுதுய்யா என்ன பாதிலேயே நிறுத்திட்டீ MIC பயல பார்த்து நினைத்து பயம் வந்துருச்சு உங்களுக்கு அப்படிதானே என்று நாங்கள் அர்த்தம் கொள்ள வேண்டாமென்றால் முழுவதும் எழுதுங்கோ