1எம்டிபி, ரிம2.6பில்லியன் ‘நன்கொடை’ பற்றிப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேரடியாக தம்மைக் கண்டித்ததாக கெடாவின் முன்னாள் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் கூறினார்.
“நான் (1எம்டிபி, ரிம2.6பில்லியன் பற்றிப்) பேசியதால் பிரதமர் அதிருப்தி அடைந்திருந்தார், ஆத்திரப்பட்டார்…”, எனக் காணொளி ஒன்றில் முக்ரிஸ் கூறினார். தம் ஆதரவாளர்களிடம் முக்ரிஸ் பேசியபோது பதிவு செய்யப்பட்ட காணொளி அது.
ஏழு-நிமிடம்-52-வினாடிகளுக்கு ஓடும் அக்காணொளி முக்ரிஸ் மகாதிர் எஃப்சி(ரசிகர் மன்றம்) முகநூல் பக்கத்தில் காணப்பட்டது.
“ஒரு எம்பி என்ற முறையில் பிரதமரான அவரைப் பற்றிப் பேசியது முறையாகாது என என்னிடம் அவர் நேரடியாகக் கூறினார். அதன் காரணமாக நான் எம்பி பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார்.
“லங்காவியில் ஒன்றரை மணி நேரம் அவருடன் இருந்தேன். நான் மாநில அம்னோவைக் கவனிக்கவில்லை மாநில நிர்வாகத்தைக் கவனிக்கவில்லை என்பதற்காக என்மீது ஏமாற்றம் கொள்வதாக ஒருமுறைகூட அவர் குறிப்பிடவில்லை.
“என்னுடைய பேச்சில் அவரைக் கண்டித்தேனாம். அந்த ஆத்திரம்தான் அவருக்கு”, என் முக்ரிஸ் அக்காணொளியில் கூறினார்.
அம்னோவில் சர்வாதிகாரத்தைப் பற்றி வாய் திறக்கக் கூடாது. முக்ரிஸ் அம்னோவின் சட்ட திட்டங்களை மீறிவிட்டார். அம்னோவின் ‘இந்த’ சட்டதிட்டங்களுக்கு உயிரூட்டியவரே அருமை தந்தையான மகாதிமிர் தானே, முக்ரிசுக்கு எப்படி தெரியாமல் போயிற்று?
சர்வதிகாரம் உங்கள் தந்தையிடம் இருந்து வந்தது என்பதனை மறந்துவிடாதிர்கள்.அதன் தொடர்கதை உங்கள் பதவி துறப்பு.மற்றவர்களை குறை சொல்லாமல் உங்கள் தந்தை செய்த அட்டுழியங்கள் குறிப்பாக தமிழர்களுக்கு இழைத்த அநீதியை நினைத்து பாருங்கள்.
உண்மை என்றுமே கசக்குமே– அதிலும் இந்த கூறு கெட்ட திருடன் என்றைக்கு தன்னுடைய தவற்றை ஒத்துக்கொள்வான்?
அவன் ஆயுதம் உலகத்திலேயே பெரியது என்று சொல்லியிருந்தால் கூட அல்லது ஒரு நடிகை யை செட் உப செய்து அவனோடு படுக்க வைத்து இருந்தால்கூட உனக்கு பதவி இருந்திருக்குமே , சிவாஜி styelil படிக்கவும்