ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு வழங்கப்படும்: மனோகணேசன்

mano_ganesan_001ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுத்திட்டதைப்பெறுவதையே மலையக மக்கள் முன்னணியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கோரிவருவதாகவும் இந்த ஆண்டுக்குள் அந்த தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் எனவும் தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு கலந்துரையாடல் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் கே.மனோராஜ் தலைமையில் இன்று சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

https://youtu.be/g87hk2Y9hOc?list=PLXDiYKtPlR7PtiHRLtVnoEd7jURR0q9ZD

இந்த நிகழ்வில் தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு கலந்துரையாடல் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா, மண்முனைவடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் உட்பட பழைய மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழுவினர்,பெற்றோர் ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நான்கு இல்லங்களின் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சிகளும் நடைபெற்றன.

-http://www.tamilwin.com

TAGS: