இடைநீக்கம் செய்யப்பட்ட அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினையும் முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரையும் கட்சியிலிருந்து நீக்க அடுத்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும்.
அவ்விருவரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து வெளியேறக் கோரும் குடிமக்களின் பிரகடனத்துக்கு ஆதரவளித்ததுதான் காரணம் எனத் தெரிகிறது.
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி அத்தீர்மானத்தை முன்மொழிவார் என்று கூறப்பட்டுள்ளது.
த ஸ்டாரில் வெளிவந்த அச்செய்தி உண்மைதானா என்று தெரிந்துகொள்ள அவரைத் தொடர்பு கொண்டபோது, புவாட் “ஆம்” என்று மலேசியாகினிக்கு மின்னஞ்சலில் செய்தி அனுப்பினார்.