பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் வழங்கபட்ட ரிம2.6 பில்லியன் அரசியல் நன்கொடை தொடர்பில் இரண்டு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடுத்த கேள்விகளை மக்களவை நிராகரித்தது.
மன்சூர் ஒத்மான்(பிகேஆர்- நிபோங் தெபால்) நன்கொடையில் மீதப்பட்ட தொகை பற்றியும் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின்(பிகேஆர்- புக்கிட் கெட்டில்) பிரதமர் ரிம2.03 பில்லியனை எப்படித் திருப்பிக் கொடுத்தார் என்றும் கேட்டிருந்தனர்.
அமைச்சரின் பொறுப்புகள் பற்றிய கேள்விகளுக்கு மட்டுமே இடமுண்டு என்று கூறி அவர்களின் கேள்விகள் நிராகரிப்பட்டன.