முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் மிகுந்த பற்றும் பாசமும் வைத்துள்ள பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மாட் லாய் பூஜாங், அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து அகற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
குறுகிய ஆதாயத்துக்காக அரசியலைப் பயன்படுத்தக் கூடாது என்ற மாட்சிமை தங்கிய மாமன்னரின் அறிவுரையை மகாதிர் பின்பற்ற வேண்டும் என்று அஹ்மாட் கூறினார்.
“நான் மிகவும் மதிக்கும் துன் மகாதிர் பிரதமரை வெளியேற்ற முயற்சி செய்வதைக் காண வருத்தமாக இருக்கிறது. ஆகோங்கின் அறிவுரைக்கேற்ப அவர் அம்முயற்சியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
“போதும், போதும் நிறுத்திக் கொள்ளுங்கள்”. அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அஹ்மாட் இவ்வாறு கூறினார்.