அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவது உலக பேரழிவு: ஆய்வு நிறுவனம் கணிப்பு

donald_9_001அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவது உலக பேரழிவுகளில் ஒன்று என ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த தி எக்னாமிஸ்ட் யூனிட் என்ற தனியார் நிறுவனம் உலகம் சந்திக்கக்கூடிய முக்கிய 10 பேரழிவுகள் தொடர்பாக ஆய்வு நடத்தியது.

அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பு தேர்வு செய்யப்படுவது 6வது மிகப் பெரிய பேரழிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன பொருளாதாரம் வீழ்ச்சியடைவது முதல் பேரழிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் உக்ரையின் ஆக்கிரமிப்பு, சிரியா பனிப்போர், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிரீஸ் வெளியேறுவது போன்றவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவதை விட டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதே மாபெரும் பேரழிவு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் ஜனாதிபதியானால் உலக பொருளாதாரத்துக்கும் அமெரிக்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்புக்கு கடும் ஆபத்து ஏற்படும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் ஜனாதிபதியானால் மெக்சிகோ மற்றும் சீனாவிடம் உள்ள பொருளாதார உறவு பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com