கோலாலும்பூரில் உள்ள பசார் மாலாம் வியாபாரிகள் பொய்களைப் பரப்பக்கூடாது, அரசாங்கத்தின்மீது அவதூறு கூறக்கூடாது.
அவர்கள் அரசாங்கத்துக்கு நல்ல இடையீட்டாளர்களாகச் செயல்பட்டு அரசாங்கம் பற்றி நல்லதாகவே சொல்ல வேண்டும் எனக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கேட்டுக்கொண்டார்.
“உங்களை வேண்டிக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் மக்களைச் சந்திக்கிறீர்கள். அவர்களிடம் (அரசாங்கம் பற்றி) நல்லதாகவே சொல்லுங்கள்”, என்றார்.
தெங்கு அட்னான், ஜாலான் கூச்சிங் அருகில் உள்ள பிகேஎன்எஸ் அடுக்ககத்தில் ‘பசார் மாலாமின் உருமாற்றம்’ என்ற நிகழ்வில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
ஏன்? பங்களாதேசிகளும், மியன்மார்காரர்களும் அரசாங்கத்தைப் பற்றி நல்லதைத்தானே சொல்லுவார்கள்? அவர்கள் மீது அப்படி என்ன சந்தேகம்?
கவலைப் படாதீர்கள் தெங்கு அட்னான் அவர்களே! அந்த பாசார் மாலாம் காரர்களுக்கு IC கொடுங்கள். நம் நாட்டை பற்றி நல்லதாகவே பறைவார்கள்.
முதல்ல உள்ல்லூர் அல்லது வெளியூர்வாசியா என்று சரியாசொல்லுங்க இது எப்படி உங்களுக்கு தெரியும்
அட நொல்லகன்கலை கொண்டு பார்க்கும் நீங்கள் பசார் மாலமில் வெளிநாட்டினர் தான் நிறைய வியாபாரம் செய்கின்றனர் குருடன்களா அவன்களுக்கு my card கொடுத்து விடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் .
ஹ ஹா ஹா ஹா என்னே அறிவிலித்தனம்? இவனெல்லாம் தலைவன்.
அட்னான் அவர்களே! ஏன் அரசாங்க தகவல் சாதனங்கள் எல்லாம் உங்கள் கைகளில் தானே செயல்படுகின்றன. இப்பொழுது பாசார் மாலாம் வியாபாரிகளையும் பகுதி நேர “சாதனங்களாக” மாற்றிவிட்டீர்களா?
அரசாங்கத்தைப் பற்றிய உண்மையைச் சொல்லாதீர்கள் என்றாலும் பொருள் இருக்கும்!
அட டா, து. அட்னான் அவர்களே, ரொம்ப கீழே இறங்கிட்டீங்க, பசார் மாலாம் வியாபாரிகளுக்கு தெரிந்த உண்மை, உள்ள அறிவு, தேச பற்று எதுவும் உங்ககிட்ட இல்லேனு காட்டிட்டிங்க. இதைத்தான் , வெறும் பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படற கூட்டந்தான் நஜிப் அமைச்சரவைனு மக்கள் சொல்றாங்கலா?
முன்பு வாடகை வண்டி taxi ஓட்டுனர்களை சொன்னீர்கள் ! இப்பொழுது pasar malam வியாபரிகளா ? இன்று மக்களின் பொருளாதார சிக்கலை உணர்ந்தவர்கள் இவர்கள் ! உங்கள் தொடை என்னமா நடுங்குது என்று விளங்குகிறது !