மரினா: சந்தை சரிவது முட்டாள் தலைவர்களால், ஓடிப்போகும் மகள்களால் அல்ல

 

Marinaidiotsபங்குச்சந்தை சரிவது முட்டாள்தனமான தலைவர்களால்தான், காதலருடன் ஓடிப்போகும் மகளால் அல்ல என்று மரினா மகாதீர் மத்திய அமைச்சர் சாலே சைட் கெருவாக்குக்கு சாட்டை அடி கொடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டை தாக்கும் நோக்கத்தில் அவரின் மகள்களில் ஒருவர் ஓர் இந்தியருடன் ஓடிவிட்டார் என்ற வதந்தியால் பங்குச்சந்தை மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் சரிவு கண்டது என்று நேற்று அந்த அமைச்சர் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய போது மரினா இவ்வாறு கூறினார்.

“அன்புள்ள சாலே, மக்கள் ஓடிவிடுவது, குறிப்பாக அதில் உண்மை இல்லாத போது, பங்குச்சந்தையைப் பாதிக்காது.

“விஐபிகள் பில்லியன் கணக்கில் திருடுவது, பாதிக்கும். முட்டாள்கள் நாடுகளை வழிநடத்தும் போது, அது இன்னும் அதிகமாக இருக்கும்”, என்று சமுதாய ஆர்வலரான மரினா இன்று டிவிட் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வந்த இன்னொரு டிவிட்டிற்கு அளித்த பதிலில் தாம் “விஐபிகள்” என்று குறிப்பிட்டது “பணக்கார அரசியல்வாதிகள்” என்று மரினா விளக்கமளித்திருக்கிறார்.