சரவாக்கின் “விரும்பத்தகாதவர்” பட்டியலில் அமானா இளைஞர் உதவித் தலைவர் ஷாஸ்னி முனிர் முகம்மட் இஸ்னினும் சேர்ந்து கொண்டிருக்கிறார். சரவாக் சென்ற அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஷாஸ்னி ஓர் அறிக்கையில், காலை மணி 7.57க்கு சிபு விமான நிலையத்தை அடைந்ததாகவும் ஆனால், தடுக்கப்பட்டவர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருப்பதால் திரும்பிச் செல்லுமாறு கூறப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
“நான் எதிரணியைச் சேர்ந்தவன் என்பதுதான் அனுமதி மறுக்கப்பட்டதற்கு காரணம் என்றால், அடினான் சாதேம் ஜனநாயகத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் என்பது தெளிவு”, என்றவர் சொன்னார்.
He is malaysian and tax payer he got right to any part of malaysia HE is not crimanal