இன்று சரவாக் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் பரபரப்பாக நடந்து முடிந்தது.வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை மணி 10-க்கு முடிவுக்கு வந்தபோது இரண்டு இடங்களில் பாரிசான் நேசனல் போட்டியின்றி வெற்றி பெற்றது.
புக்கிட் சாரி, புக்கிட் கோத்தா ஆகிய இரு தொகுதிகளிலும் பிஎன் போட்டியின்றி வென்றதாக தேர்தல் ஆணையத் தலைவர் முகம்மட் ஹாஷிம் அப்துல்லா அறிவித்தார்.
எனவே சரவாக்கின் 11வது சட்டமன்றத் தேர்தலில் 80 தொகுதிகளுக்குப் போட்டி இருக்கும்.
இம்முறை 5 தொகுதிகளில் ஐந்து-முனை போட்டிகளும் 12 இடங்களில் நான்கு-முனை போட்டியும் உண்டு.
சரவாக் தேர்தலுக்கான வாக்களிப்பு நாள் மே 7.