சரவாக் சட்டமன்றத் தேர்தலில் பிகேஆருக்கும் டிஏபி-க்குமிடையில் மூண்ட சர்ச்சை இன்னும் ஓயவில்லை. ஆறு தொகுதிகளில் அவை இரண்டும் ஒன்றுக்கு எதிராக மற்றொன்று களமிறங்குகின்றன. .
பத்து கித்தாங், மூலு, முரும், சிமாங்காங், இங்கேமா, மம்போங் ஆகியவையே அவ்வாறு தொகுதிகளாகும்.
பத்து கித்தாங் தொகுதியை டிஏபி பிகேஆருக்கு விட்டுக் கொடுத்திருந்தது. ஆனால், பிகேஆர் உடபாட்டின்படி நடந்துகொள்ளவில்லை என்பதால் அங்கு களமிறங்க அது முடிவெடுத்தது.
மற்ற ஐந்து தொகுதிகளும் முன்பே டிஏபி-க்கு ஒதுக்கப்பட்டவை.
இந்த எதிர்கட்சிக் கூட்டணிகளின் பிளவை பெரிதுபடுத்தி செய்திகளாக்கி மகிழ்ந்துவருகிறது இவர்களின் எதிரிக்கட்சி.