இலங்கைக்கான பயணத் தடை நீக்கம்; புலம்பெயர் தமிழருக்கு இனிப்பான செய்தி

srisriமஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அச்சுறுத்தல் மற்றும் உயிராபத்து காரணமாக இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்ளிட்ட  இலங்கையர்கள் இலங்கை திரும்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை வருவதற்கு மாத்திரமன்றி இலங்கை கடவுச் சீட்டுக்களைப் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.அந்தத் தடையும் நீக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் உள்ள இலங்கை கடவுச் சீட்டுகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று அரசு அறிவித்துள்ளது.

இது உண்மையில் புலம்பெயர் தமிழருக்கு இனிப்பான செய்தியாகும்.இந்தியாவுக்கு வந்து உறவினர்களைச் சந்திப்பதற்கும் திருமணங்களை முடித்துச் செல்வதற்கும் இனி அவசியமில்லை.

-http://www.athirvu.com

TAGS: