தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாம்களின் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகதிகள் தொடர்பான நடவடிக்கையாளர்கள் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கை அகதிகள் சிலர், அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் தப்பிச்செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டநிலையிலேயே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகளின் முகாம்கள் தொடர்பில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யமுடியாது. சொத்துக்களை கொள்வனவு செய்யமுடியாது. வியாபாரத்தை ஆரம்பிக்கமுடியாது. தொழில்செய்ய முடியாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று சட்டத்தரணி புகழேந்தி என்பவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக அவர்கள் சிறைவாழ்க்கையை போன்ற வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர்.
இதனையடுத்தே அவர்கள் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு உயிராபத்துக்கு மத்தியிலும் செல்ல துணிகின்றனர்.
அத்துடன் தற்கொலைககளிலும் ஈடுபடுகின்றனர் என்று சட்டத்தரணி புகழேந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், தமக்கு இந்திய குடியுரிமையை வழங்காது போனாலும் சுதந்திரமான நடமாட்டத்தை இந்திய அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் என்று அகதிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
-http://www.tamilwin.com