இந்தோனேஷிய அச்சே பகுதியில் தஞ்சமடைந்துள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவத் தயார் என மலேசியா அறிவித்துள்ளது.
இதன்படி, நிர்க்கதியாகியுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அந்நாட்டின் பினாங் மாநில பிரதி முதலமைச்சர் பீ.ராமசாமி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இந்தோனேஷிய உதவி ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த புகலிட கோரிக்கையாளர்களை அச்சே பிராந்திய நிர்வாகம் சிறந்த முறையில் பார்த்துக்கொள்ளும் என இந்தோனேஷிய உதவி ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், பினாங் மாநில பிரதி முதலமைச்சரின் கோரிக்கைக்கு இந்தோனேஷியா உத்தியோகபூர்வ பதில் எதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
அதென்ன மலேசியா உதவும். மலேசியா அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கலாமே அப்படி இல்லைன்னா பினாங்கு மாநிலம் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சரிடம் வற்புறுத்தலாமே. இவனும் ஒரு கபடதாரிதான்.
ஆகா, பேராசிரியரின் இனப்பற்றை பாராட்டுகிறேன்.
மகிழ்ச்சியும் நன்றியும் பேராசிரியரே.
எப்படியோ உதவி செய்து இருக்கின்றார் பாராட்டுவோம்..இந்திய அரசு அந்த தமிழர்களுக்கு என்ன செய்து இருக்கிறது …?
இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறது.இலங்கை அரசு புலிகளை எதிர்த்த (மறைமுக)போர் என்ற பெயரில் இலங்கைத் தமிழர்களில் எவ்வளவோ பேரை கபளீகரம் செய்தது. பெண்களின் கற்பை சூரையாடியிருக்கிறது. குழந்தைகளை கொன்று குவித்திருக்கிறது. இன்று அவர்களை அநாதைகளாய், நிர்க்கதியாக்கி. சொந்த நாட்டில் வாழ முடியாத துர்பாக்கியசாலிகளாக்கியிருக்கிறது. இந்தோனேக்ஷிய மக்களே வாழ்வு நாடி பிற நாடுகளை தேடி ஓடும் நிலையில், போயும் போயும் அந்நாட்டிடம் புகலிடம் தேடவேன்டிய அபாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டதற்கு தானும் ஒரு மிக முக்கிய காரணியாய் விளங்கியிருக்கிறது இந்தியா. இப்படியிருக்க இந்தியா எதுவுமே செய்யவில்லை என்பது நியாயமல்ல! செய்திருக்கிறது, அத்தனையும் அபத்தமாக, அதனால்தானோ என்னவோ உலகிற்கே இந்தியாவிடம் வெறுப்பும் கசப்பும். 2012 படத்தில்கூட ஓர் இந்தியனைக்கூட காப்பாற்றாமல் கைவிட்டதாய் காட்சி அமைக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
நல்ல மனம் படைத்தவர் பேராசிரியர், பிற அரசியல்வாதிகளைப்போல் முகத்திற்கு முன் பல்லிளிக்க வாய்ச்சவடால் பேசி பின்னர் ஏமாற்றும் இழிகுணம் அவருக்கு இல்லை, எதையும் முகத்திற்கு நேரே பேசும் பழக்கம் பலரை அவருக்கு பகையாக்கி வைத்திருக்கிறது போலும். சில அரசியல்வாதிகளைப்போல் பதவிக்கு வருமுன் மக்களின் காலை பிடிப்பதும், பதவி வந்தபின் எட்டி ஏழைகளின் கழுத்தை பிடிப்பதுமான கேவல குணமும் அவருக்கு கிடையாது. சிலமுறை அவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிட்டியது, யாரோ ஒரு சாதாரண பெண் என நினைக்காமல் சொந்த மகளைப்போல் அம்மா என அழைத்துப் பேசும் அவரின் கனிவைக் கண்டு வியந்திருக்கிறேன். நல்ல மனமும் உதவும் குணமும் கொன்டவர் பேராசிரியர் என்பது அவரை அறிந்தவர்கள் நன்கறிவர். நமக்குள்ள பெரும் பிரச்சனையே நம்மிடையே வாழும் நல்லவர்களை அடையாளம் காணத் தவறுவதும், அவர்கள் இல்லாத போதில் அவர்களுக்கு சிலை வைப்பதும், விழா எடுப்பதும்தான். பாவம் நம்மினம், அத்திப்பூ போன்று நம்மிடையே வாழும் நல்ல தலைவர்களும்தான் !
பேரறிவாளன் !
இலங்கை அகதிகளுக்கு புகலிடமா ? அதுவும் மலேசியாவில் இல்லையென்றால் பினாங்கு மாநிலத்திலா ? மலேசியாவிலோ அல்லது பினாங்கு மாநிலத்திலோ இலங்கை அகதிகளுக்கு புகலிடம் தர வேண்டுமானால் அதற்கு நிறைய “FORMALITIES” நிறைவு செய்ய வேண்டி இருக்கும். வேறுநாடுகளைத்தானே அடைக்கலம் கொடுங்கள் என்று குரல் கொடுக்கிறோம் அவர்கள் நாட்டின் “FORMALITIES” பற்றி நமெக்கென்ன கவலை என்று பீ.ராமசாமி கூறினாலும் ஆச்சர்யம் இல்லை.
இலங்கையில் போர் முடிந்து விட்டது. இனி அவர்கள் ஏன் அகதியாக மற்ற நாடுகளில் புகலிடம் தேட வேண்டும்? இந்த முட்டாள் யு ஏன் என்ன செய்கிறது.?? தான் மக்களை அகதியாக ஓட வைக்கும் இலங்கை நாட்டை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டுமே தவிர பேடித்தனமாக மற்ற நாடுகளில் புகலிடம் கொடுக்குமாறு கேட்க கூடாது. எந்த நாடு தான் மக்களை அகதிகளாக உருவாக்கியதோ அந்த நாட்டை தனிமை படுத்த வேண்டும். . அப்போதுதான் இந்த மனித குல அவலம் தீரும்.
மின்னலே, இந்திய தலையிட்டால், தான் இந்த அளவாவது இலங்கை தமிழர்கள் மிஞ்சுகிறார்கள். இல்லையேல் எப்போட்டதோ ஸ்ரேலிய படி கொண்டு துடைத்து ஒழித்து இருப்பார்கள்.