மக்களை கொன்று குவியுங்கள்! உத்தரவிடும் தீவிரவாதி

isis_boystatement_001ஜேர்மனியில் ஓடும் ரயிலில் திடீரென பயணிகளை தாக்கிய குற்றவாளி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் பவேரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையே ஓடும் மின்சார ரயிலில் ஒருவன் பயணிகளை திடீரென கோடாரி மற்றும் கத்தியால் தாக்கியதில் 21 பேர் படுகாயமடைந்தனர், இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பின்னர் ஓச்ஸென்பர்ட் நிலையத்தில் ரயில் நின்றதும் கீழே இறங்கி தப்பிச் செல்ல முயன்றவனை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது, இதன் பின்னர் குற்றவாளி குறித்து விசாரணை நடத்தியதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்றும், அகதியாக ஜேர்மனிக்கு வந்தவர் என்பதும் தெரியவந்தது.

ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில் குற்றவாளி, ஐஎஸ் தீவிரவாதி இயக்கத்தின் உறுப்பினர் என தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

மேலும் வீடியோவில் தோன்றும் நபர் ஒருவர் மற்றவர்களுக்கு விடுத்துள்ள செய்தியில், உங்களால் ஈராக் அல்லது சிரியாவுக்கு வர இயலவில்லை என்றால் முடிந்த அளவுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள மக்களை கொன்று குவியுங்கள் என உத்தரவிடுவது போன்று முடிகிறது.

இதில் குற்றவாளி பேசும் மொழி, பாகிஸ்தானை சேர்ந்த மக்களுடன் ஒத்துப் போவதால் பாகிஸ்தானை சேர்ந்த நபராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் அகதி கோரிக்கை குறித்த ஆவணங்களை சோதித்து பார்த்ததில் ஆப்கானை சேர்ந்தவர் தான் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

-http://news.lankasri.com