30 ஆண்டு கால கொடிய யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த எமது இளைஞர், யுவதிகளின் சக்திகள் வீணடிக்கப்பட்டுள்ளது.
தற்போது யுத்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அவர்களின் சக்திகள் வெளிகொண்டு வரப்பட வேண்டும்.
அதற்கு கிராம மட்டத்தில் விளையாட்டுக்கள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இளைஞர் மற்றும் யுவதிகள் மத்தியில் தலைமைத்துவத்தினை வளர்த்துக்கொள்வதற்கு விளையாட்டு ஒரு உத்தியாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/0mTKEtJ7zOk?list=PLXDiYKtPlR7ONRUNajwxpMbX3JXR1L_o1