முன்னாள் போராளிகளின் தொடர் மரணத்தில் சந்தேகம்: சர்வதேச மருத்துவ ஆய்வு வேண்டும்

tamilini 8dddபுனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் தொடர் மரணம்குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள அவர்களது உறவினர்கள். இதுகுறித்து சர்வதேசமருத்துவக் குழுவினால் ஆய்வுசெய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றநல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்களது கருத்தறியும் செயலணியில் கலந்துகொண்டுகருத்துத் தெரிவித்த ஒருவர். இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

அத்தோடு. முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வரும் நிலைநிறுத்தப்பட வேண்டுமென்றும், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களதுகாணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் இதன்போது பலர்கருத்துத் தெரிவித்தனர்.

மேலும், தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படாமல் அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

-http://www.tamilwin.com


கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா?

https://youtu.be/-As7vvxcIa0?list=PLXDiYKtPlR7Pgzx0SLinhwVOj5Y8QEKlP

TAGS: