மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ஆகியோர் மீது சிறிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று அதிர்வு இணையம் அறிகிறது. மலேசியா சென்ற மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் வெகுண்டு எழுந்து பல போராட்டங்களை நடத்தி பல இடங்களில் அவரை கலைத்தார்கள். இன் நிலையில் மகிந்தரை பாதுகாத்து, இறுதியில் கவனமாக அவரை கூட்டிச் சென்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் வழி அனுப்பிவைத்தார் தூதுவர் தினேஷ் குணவர்தன .
வழி அனுப்பிவிட்டு வெளியே வந்த தூதுவர் மற்றும் துணை தூதுவரை சில தமிழர்கள் அறைந்துள்ளார்கள். மகிந்த தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்ற பாவி. அவருக்கு நீங்கள் உதவிசெய்வதா ? என்று கேட்டு கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதுவே மகிந்த மாட்டி இருந்தால் மலேசிய தமிழர்கள் அவரை கிச்சடி போட்டிருப்பார்கள். தமிழ் இன உணர்வில் சற்றும் சளைக்காத மலேசிய வாழ் தமிழர்களுக்கு, உலகத் தமிழர்கள் என்றும் , கடமைப்பட்டவர்களே. பல நாடுகளில் வாழும் தமிழர்கள் இன்றுவரை ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை என்பதனை இச்சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது.
-http://www.athirvu.com
மலேஷியா தமிழர்களுக்கு மானம் .இன உணர்வு உண்டு என்பதை வெளி படுத்தி உள்ளார்கள் …ஒரு மணி நேரம் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த கோமாளியை இவர்கள் பின்பற்றவில்லை …இந்த சம்பவம் ..இதட்கான கரணம் சர்வதேச அளவில் நோக்கப்படும்
மலேஷியா தமிழர்கள் திராவிட வியாபாரி மாதிரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இருந்தால் ராஜபக்சே சிரித்து இருப்பான்
மலேசியாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார் மீது நேற்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரதி அமைச்சர் ஹர்ஷ த சில்வா சம்பவம் தொடர்பில் காரணங்களைக் கேட்டறிவதற்கு இலங்கையிலுள்ள மலேசியாவுக்கான உயர் ஸ்தானிகரை இன்று வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்துள்ளார். நன்றி தமிழ்வின்
நமது நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் சுதந்திரமாக உலவுகிறார்கள். அவர்களிடம் கொஞ்ச நேரத்துக்கு ஒரு துப்பாக்கியை ,’ பிஞ்சாம்’ வாங்கி, இந்த இலங்கை கொலைக்காரனையும், அவனை சார்ந்தவர்களையும் ‘போட்டிருக்க’ வேண்டியதுதானே]
தவறானா செயல். மலேஷியா தமிழர்களை தலை குனிய வைத்த செயல்.