வைத்திய பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை : முன்னாள் போராளிகள்

ltte cadreவடமாகணத்தில் இதுவரை மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வீச ஊசி ஏற்றப்படவில்லை என வடமாகண மாவட்ட வைத்தியசாலை விசேட பரிசோதனை வைத்தியர்கள் இன்று கூறியுள்ளார்.

எனினும் இதுவரை குறைந்த எண்ணிக்கையை கொண்ட முன்னாள் போராளிகளே மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நிலையில் உள்நாட்டு வைத்தியர்களினால் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனைகளில் தமக்கு நம்பிக்கையில்லையென சில முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனை தமக்கு திருப்தி அழித்துள்ளதாகவும் உளவியல் ரீதியான் தாக்கத்தில் இருந்து தாம் விடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதே சமயம் மருத்துவப்பரிசேதனையில் விசஊசி தொடர்பாக முன்னாள் போராளிகள் இனம்காணப்படுவார்களா? அச்சத்தில் இலங்கை புலனாய்வு பிரிவு தொடர்ந்து நோட்டமிட்டுள்ளதா! எனவும் சம்மந்தப்பட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: