வணக்கம், கா.ஆறுமுகம் அவர்களே. அரசியல் விமர்சனம் என்பது பொதுவாகவும் பொதுநலனுக்காவும் சமூக நலன் கருதியும் எழுதப்பட ண்டும்.
ஆளும்கட்சிக்கு இருக்கும் பலவீனங்களையும்,அதில் இருக்கும் இந்தியப் பிரதிநிதி மஇகாவை குறைகாண்பதில் குற்றமேதும் காண நான் விரும்பவில்லை.
எனது கேள்விக்கு தாங்கள் கண்டிப்பாக நிதானமாக பதில் அளிக்க வேண்டும்.மஇ காவை கை விடுவோம்,வெறுப்போம், இது உங்கள் பிரச்சாரங்களில் ஒன்று,சரி மஇகாவுக்கு மாற்று எது ? எதிர்க்கட்சியா?
மத்திய அரசாங்கமும் மஇகாவும் இந்திய மக்களை பூசிமொழுகுகிறார்கள் என்றால் ,எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாழும் இந்திய மக்களுக்கு எதிர்க்கட்சிகள் செய்த சாதனைகள் என்ன? அவற்றை உடனடியாக பட்டியலிட்டு எனக்கு விளக்கி கூறுங்கள்.
நான் மிகவும் ஆவலாகா இருக்கிறேன் உங்களின் பதிலுக்கு. எனக்காக இல்லை, இந்திய மக்களுக்காக கேட்கிறேன்,மஇ காவுக்கு மாற்று எது எதிர்க்கட்சியா?
உங்கள் கட்டுரைகள் எதிர்கட்சிக்கு சாதகமாகவே இருக்கிறது என்றால் நீங்கள் எதிர்கட்சிக்கு ஆதரவாளராக இருப்பதால் மட்டுமே, எதிர்க்கட்சியில் இருக்கும் பலவீனத்தையும் தைரியமாக சுட்டிகாட்டுங்கள், எதிர்க்கட்சி முதல்வர்கள் அரசியல் சண்டையிடுவதிலே நேரத்தை செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு மக்களின் மீது என்ன கவலை இருக்குமோ என்ற அச்சம்தான் மத்தியில் ஆளும் கட்சிக்கு அடுத்த தேர்தலில் மிக பெரிய வெற்றியை தேடி தர போகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா ?
மாற்றம் வேண்டும் என்று இருந்த மக்களின் மனதில் எதிர்க்கட்சிகள் மீது இருந்த நம்பிக்கை ,தற்பொழுது ஆளும்கட்சியின் மீது திரும்பி இருக்கிறது என்பதை ஒருகருத்து கணிப்பை நடத்திவிட்டு உங்கள் கட்டுரையில் மஇகாவுக்கு மாற்று எது என்பதையும், மத்தியில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களை பிரதிநிதிக்க போகும் கட்சி எது என்பதை சொல்லுங்கள் .சீனர்களுக்கு டி ஏ பி ,மலாய்காரர்களுக்கு சொல்லலேவே வேண்டாம், தமிழனின் பிரதிநிதி எது ?
சும்மா எதிர்கட்சிக்கு ஆதரவாளர் என்பதால் அதுவும் சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் நீங்கள் அதுவும் டத்தறான் மெண்டாரி ரெஸ்டாரன் சுபைடாவில் காலையில் தேனீர் அருந்தும் திரு கா ஆறுமுகம் அவர்களே,வாருங்கள் டேசா மென்டாரி பக்கம் வந்து உங்களுடைய கருத்து கணிப்பை நடத்துங்கள், மஇகாவா எதிர்க்கட்சியா என்றால் ….சிலாங்கூர் மாநில இந்திய மக்களின் வாழ்வாதாரம் சிரியாய் சிரிப்பதை பார்ப்பீர்கள்.
தீபாவளிக்கு ஐந்து கிலோ அரிசியோடு வரும் எதிர்க்கட்சிகள் அடுத்த தீபாவளிக்கு எட்டிப்பார்க்கும் கதைகளும் உங்கள் காதில் விழும் ,அதை வாங்குவதற்கு கை ஏந்தும் இந்திய குடும்பம் இன்னும் வரிசையில் நின்று கொண்டுதான் இருக்கிறது .நன்றி .அரசியல் என்பது சாக்கடைதான் அங்கு மஇ கா இருந்தால் என்ன எதிர்க்கட்சி இருந்தால் என்ன எல்லாம் பதவி மோகமும் சுயநலமும் என்பதை புரிந்து கொள்பர்கள் புரிந்து கொள்வார்கள் நீங்களும்தான். – இந்திய சமுதாயத்தில் இருந்து ஒரு குரல்
(குறிப்பு – விமர்சன கண்ணோட்டத்துடன் கருத்துகளை தந்த குரலுக்கு நன்றி – கா. ஆறுமுகம்)
இண்டிய சமுதாயத்தின் குரலோன் என்னை மீண்டும் அரசிலுக்கு இழுத்து உளார். உங்களின் குமுறல் என்னைப்போல நியாயமாகத்தான் உள்ளது என்பதால் இணைக்கிறேன்.
உங்கள் சீற்றத்துக்கு போகும் முன் , ஒரு முன்னோட்ட வழுக்களை பார்ப்போம்.மகாதீர் முகிடின் இணைப்பால் UMNO இரண்டாகிக்கொண்டிருக்கிறது. இந்த விளக்கம் ஏன் என்றால் ம இ கா வுக்கு பதில் யார் எது நமது அரசியல் பிரதிநிதித்துவம் என்ற வெடியம் இடியும் எனக்கு பிடித்துள்ளது..
புதிதா வந்துள்ள ப்ரீபூமி இன்னும் என்னவெல்லாம் செய்யும் என்று பொறுத்து பார்ப்போம். இது ஏன் என்றால் UMNO அண்ணண் அணைத்து BN கட்சிகளையும் வெல்ல ஆளும் நிலை இனி இராது அந்த அளவுக்கு தேசிய பொருளாதார பூசல்கள். PRU 14 . இன்னும் பயங்கரம் மேலிடும் .PH உடன் ப்ரீபூமி கூட்டு என்பது BN னின் சிதறலுக்கு அர்த்தம். இதில் ம இ கா
PRU 14 தொகுதிகளின் நிலையை என்னால் உணர முடிகிறது. ஆக ம இ கா வோ அல்லது PKR ரோ இண்டியனுக்கு செம்பியனாக முடியாது என்ற விதியில் உடன் படுகிறேன் ! மலேஷியா இண்டியனுக்கு அரசியல் திண்டாட்டம் ஆரம்பமாகி 30 வருசமாச்சு.
இனியும் அப்படித்தான் இடையில் ஆடும் அரசியல் வேட்கை வேட்டை வெறிகள் எல்லாம் குறிப்பா சிறுபான்மையில் பெரும்பான்மை பேனர் தூக்கும் தமிழனை வீழ்த்திவிடும்.
இது ஒரு அறிகுறி நினைவூட்டல்தான் ..நானும் உங்களைப்போல எந்த கட்சியாவது ஆளட்டும் தமிழனும் இண்டியனும் நாற்காலியில் அமர்ந்ததால் நமது உரிமை பெருமை நாறாமல் இருக்கும் என்ற ஆசைதான். நம்ப ஆளுங்க வென்று சாதித்து கிழிக்கப்ப்போவது ஒன்றும் இல்லைதான் என்னையும் சேர்த்து !
POLITICAL CRITICS என்று இருக்குதாம் !அதுக்காவது சத்தம் போட்டு
மக்களை தமிழர்களை விழிப்படைய செய்யலாம் .என்ற ஊறுகாய் ஆசைதான் ..இதுகூட வேண்டாம் என்கிறீர்களா? அப்படினா நமக்கு ஏன் அரசியல் அசிங்கம் ? அவரவர் வீட்டையும் அடுப்பையும் பார்த்துகிட்டு சாமியோ சரணம்…. நாராயணா போட்டு வேட்டு வைக்கலாமா ?
ஆளும் கட்சியும் சரியில்ல எதிர்க்கட்சியும் ஏம்மாற்றான் என்றால்
நமது உமது நிலைப்பாடுதான் என்ன சார் ? கபாலியாகலாமா ? ஆர்வத்துடன் அடக்கிககொள்கிறேன். நன்றி
மா இ கா தான் இந்தியர்களின் ஒரே பிரச்னை, அதற்கும் ஒரு மாற்று தேவையா ? பிரச்சனைக்கு இன்னும் ஒரு பிரச்னை எப்படி தீர்வாகும் ?
ம இ கா தேவை, அதன் பங்கை இனவாத அரசியல் வழி செய்ய இயலும் ஆனால் நல்ல தலைவர்கள் வேண்டும். அம்னோ உள்ள வரை ம இ கா தேவை. அம்னோ திருடுவதால், ம இ கா மட்டுமல்ல எதிர் கடசிகளும் திருடுகின்றனர். திருடினால்தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலை உள்ளது
பிரச்சனைகள் கொண்ட எதிர்க்கட்சிகள் மஇகாவின் இடத்தை கண்டிப்பாக நிரப்பதற்கு ஒரு “தலையாட்டி” அமைப்பு இருக்கும். …ஏனென்றால் இன்று எப்படி UMNO வின் கைப்பாகையாக ம இ கா இருக்கிறதோ …அதே போல நாளை DAP யின் பிடியில் மெல்லவும் முடியாமலும் முழுங்கவும் முடியாமலும் அந்த அமைப்பு பேந்த பேந்த விழித்துக் கொண்டு இருக்கும்….
அப்படியானால் எப்போதுமே ம இ கா ஒரு மட்டமான கட்சி தானே? மட்டமானவர்களை கொண்ட ஒரு கட்சி வேறு எப்படி இருக்க முடியும்.
இந்தியர்களுக்கு மலேசியாவில் நல்ல அரசியல் கட்சி இல்லை. ம இ க எப்போ இந்தியர்களின் நலனைப் புறக்கணித்து ம இ க தலைகளின் நலன் நாடும் கட்சியாகிப்போனதோ அன்றே ம இ க மக்கள் ஆதரவில்லாத கிளப் ஆகிப்போனது. எதிர்கட்சிகளை நம்பினால் அது பெரும்பாண்மை தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கிறது. தெளிவான அரசியல் முன்னெடுப்புகளைக் காண இயலவில்லை. அவன் அவன் என் ஜி ஓக்கள் என்று கிளம்பி காரியங்களைச் சாதிக்க முற்படுகின்றனர். இந்தியர்கள் கட்டுக்கோப்பிலிருந்து சிதறடிக்கப்பட்டார்கள். திக்குத் தெரியாத காட்டில் வெட்கம் கெட்டுக் கிடக்கிறோம்! இனி இந்த நாட்டில் இந்தியராய் இணைந்து பழைய நிலையை எட்டுவது கனவே!
ஒரு ஐந்து பேர் ஒன்றாக உட்கார்ந்து சுமூகமாக, நாகரிகமாக, பொதுநலனுக்காக விட்டுக்கொடுத்து இந்தியர்களால், தமிழர்களால் பேச முடியுமா? சுயநலமற்ற பொதுநலம் மிக்க அந்தப் பண்பு இன்று உண்டா? ஆணும் பெண்னும் ரவுடித்தனப் பாணியிலே மள்ளுகட்டுவதில்தானே சுகம் காணுகின்றனர். வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன். நான் 4d எண் கணிப்பதிலும் பணம் சம்பாதிக்கவும் துவங்கிவிட்டேன். மிகுந்த பயிற்சிக்கும் ஆய்விற்குப் பின்பும் கணிப்பில் துள்ளித வெற்றியை எட்டிவிட்டேன். எந்தக் கட்சிக்காரன் உதவியோ ஜாதிகாரன் உதவியோ எதுவுமே இல்லாமல் நான் உண்டு என் வேலையுண்டு என இருக்கிறேன்! எனக்கு மாலையும் வேண்டாம் நோபல் பரிசும் வேண்டாம். எவனையும் ஆளவும் ஆசைப்படவில்லை!
jr அப்படியா ? அப்படியே அமோசான் காட்டில் அதுகளோட வாழ கற்றுக்கொள்ளுங்கள் இன்னும் வசதியாக. பொண்டாட்டியா புள்ளையா ? ஆனால் அங்கேய் நெம்பர் அடிக்காது பிச்சைதான் மிச்சம்.
வணக்கமா
அமேசான் காட்டில் வாழப்போவது நீயா நானா என்பதைக் காலம் சொல்லும். உம்மைப் போன்றவர்கள் கிஞ்சிற்றும் முயற்சி செய்ய மாட்டீர்கள். முயற்சியில் வெற்றி பெற்றவரைக் கண்டு தூற்றுவீர்கள்; அல்லது தரக்குறைவாக விமர்சிப்பீர்கள்! காத்திருங்கள் எவனும் வந்து உங்களைத் தூக்கி நிறுத்தமாட்டான்!
முன்பு மலாய்க்காரர், சீனர், இந்தியர் என மூவினம் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடித்த அம்னோ தற்போது குறிப்பாக இந்தியர்களை தமிழர், தெலுங்கர், மலையாளி, சீக்கியர் என்ற பிரிவினையை ஆதரித்து அரசியல் லாபம் அடைவதை பார்த்தால்,
jr நீங்கள் சொல்வதுபோல் – இனி இந்த நாட்டில் இந்தியராய் இணைந்து பழைய நிலையை எட்டுவது கனவே! – என்பது எதிர்காலத்தில் உண்மையாகலாம்.
ஆளூக்கொரு பலகாரம் செய்து , ஒரிடத்தில் கூடி, எல்லோருடைய பலகாரங்களையும் பந்தியில் வைத்து இந்தத் தமிழர்களால் முகம் சுழிக்காமல் சாப்பிட முடியுமா? மடியாது நடக்காது என்றால் தமிழர்களால் எதையுமே ஒன்றுபட்டு செயல்படுத்த முடியாது. வேண்டுமானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாய்சவடால் புரியலாம். ஓர் இனமே மனோரீதியாக்க் இனம்புரியாத கட்டுக்குள் கிடக்கிறது. இந்தியாவிற்கு அடிக்கடிச் சென்று தங்களை பழைமையில் ரிவஸ் கிரேட் செய்துகொள்ளுகின்றனர். உருப்படுமா இதுகள்!?
முடியாது
jr அவர்களே, எனக்கும் ஒரு 4d தாருங்களேன். நானும் ஏழைதான்….
இதில் சந்தேகமே தேவை இல்லை– அம்னோ நாதாரிகளுக்கு தெரியும்-நாம் ஒற்றுமை இல்லாத சமூகம் என்று– அத்துடன் மற்ற இந்தியர்களை பிரித்து குளிர் காய ஆண்டுகள் காக்காத்திமிர் காலத்திலேயே ஆரம்பித்து ஆகி விட்டது,
திரு. பிலீப் அவர்களே உங்களுக்கு முதலில் எண்களைக் கணிப்பதில் நம்பகத்தன்மை உண்டா? இருந்தால் என்னை நேரில் வந்து சந்தியுங்கள்; கணிப்பைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கான மீனை நீங்களே பிடித்துக்கொள்ளுங்கள். என்னுடைய வெற்றி முப்பது ஆண்டு உழைப்பு. நீங்கள் முப்பது ஆண்டுகள் உழைக்கவோ தேடவோ வேண்டாம் . நான் தங்களுக்கு உதவுவேன். என்மீது நம்பிக்கை இல்லை என்றால் விட்டுவிடுங்கள்!