இம்மூன்று தமிழின தியாகிகளுக்கு வரும் 2017 லில் ஜனவரி 23 முதல் 26 ம் தேதி வரை நீதிமன்ற விசாரணை. இங்கே தியாகிகள் என்று எழுதக்காரணம் ஏழு நாட்கள் சிப்பான் போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த போது அவர்களின் உறவுகள் பட்ட கஷ்டங்களை நேரில் பார்த்தவன் என்பதால் தியாகிகள் என்கிறேன். இனத்துக்கு சிறை போவது எல்லோராலும் முடியாது. முடிந்தவர்களை தியாகிகள் என்பதைத்தவிர வேறு வார்த்தை இல்லை.
தமிழீழ தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே என்ற மனித கொலைக்காரனை அய்யோக்கியனை இந்த நாடு உள்ளே விட்டதால் வந்த விளைவுதான் இவர்களின் கோபம் விபரீதமானது. சட்டம் பாய்ந்துள்ள விதி என்றும் சொல்லலாம், இது அரசுப்படி நடக்கும் நடவடிக்கைதான். இமூவரும் எதிர்பார்த்த துணிச்சலைத்தான் தியாகம் என்கிறேன்.
சிலர் இவர்களுக்கு கொழுப்பு என்றெல்லாம் பேச கேள்விப்பட்டுள்ளேன். தமிழன் என்ற குருதியில் கலந்த கொழுப்பில் வீரமும் விவேகமும் கோபமும் வருவது எல்லாத்தமிழனுக்கும் வராது.
உலகத்தை உலுக்கிய தமிழீழ உள் நாட்டு தமிழ் இன அழிப்பை போர் என்று உலகத்தரக தலைகள் சொல்வது எத்தகை அறிவிலித்தன புத்தி என்பதை உலகம் அறியும்.
கோபத்தின் விளிம்பில் வார்த்தையின் உச்சத்தில் இலங்கை தூதரை விமான நிலையத்தில் அடித்தது குற்றமா என்றால் அது திட்டமிடா எதார்த்த கோபம்.வார்த்தை விவாதத்தின் கையின் குற்றம்தான்.
3 லட்சம் தமிழீழ இனத்தை கொன்ற கோபம் மலேசியாவில் வீதி முழுக்க பாமரத் தமிழர்களாக எதிர்ப்பு காலத்தில் குதித்த போது எத்தனை அரசியல் தலைவர்கள் உலக மனித உரிமைக்கு ராஜபக்சே வருகையை எதிர்த்தனர், அல்லது நாடவுளுமன்றத்தில் கேள்வி கேட்டனர் ? குறிப்பா PH என்ற எதிர்க்கட்சி கோமாளிகள் ?
அந்த மூவருக்கும் நீதிமன்ற ஜாமீன் தொகை 18 ஆயிரம் கொடுத்து உதவிய அரசியல் தலைவர்கள் யாருமில்லை > தமிழின உணர்வாளர்கள் கொடுத்த நிதிதான் இவர்கள் வெளிவர காரணம்.
இப்போது வழக்கரைஞர் நிதியாக 24 ஆயிரம் தேவைப்படுகிறது. இது யார் பொறுப்பு ? அந்த மூவரின் தனிச்சுமையா ?சமூக கடமையா? அல்லது சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பொறுப்பா என்ற ஆர்வத்தில் விடை தேடுகிறோம்.
பெர்சே என்று ஜனநாய போராட்ட கோதாவில் இறங்கிய ஒன்றரை லட்சம் மலேசியர்களின் மனித உரிமை நியாயங்கள் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டமாக முத்திரை குத்தப்பட்டு சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இந்த ஊர்வலத்தில் ஒருவர் குறைந்தபட்சம் 10 ரிங்கிட்டாவது செலவு செய்து இருக்கலாம். மொத்தம் 1 .5 மில்லியன் செலவாகி இருக்கும்.
மலேசியாவில் பெர்சே போராட்டத்துக்கும் தமிழீழ போராட்டத்துக்கும் என்ன வேறுபாடு. இரண்டுமே அரசியல், அரசு, ஜனநாயகம், மனித உரிமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பெர்சேவுக்கு தாராள தனிமனித அரசியல் ஆர்ப்பரிப்பு. ஏதோ ஒரு பிரதிபலன் அங்கீகாரம் தமிழீழ அடிக்கு தனிமனித குமுறல் என்பதில் என்ன மனிதம் வடிகிறது என்ற வினாவுக்கு சமூகத்திலிருந்து பதில் வேண்டும்.
உலக மனித இனத்துக்கு ஆபத்து மனிதனால்தான் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இனமாக ,,,சமயமாக ,பொருளாதாரமாக , கல்வியாக அல்லது மொழி போராட்டகமாக இருக்கலாம். ஆனால் யாரோ சிலர் பயங்கரவாதியாக, போராளியாக சிறைக்கு போவதும் அவன் குடும்பம் சீரழிவதும் விதியாக சதியாக மதியாக உள்ளது.
குற்றமா என்றால் ? ஜனநாய சட்ட விதி வீதியில் அமைதி ஊர்வலம் நடத்தலாம் என்கிறது. ஆனால் அரசு சிலரை குழப்ப வாதிகள் என்று கைது செய்துள்ளது. இதில் பலர் அரசியலுக்கு ஊக்குவிப்பு தேடும் படலமாக சிலர் உண்மையில் ஜனநாய போராட்ட வாதியாக அரசு சமசீர் உரிமை கேற்பது சவால்மிக்க பெருமைதான்.
இம்மூவரும் சாதார தமிழ் குடும்ப இளைஞர்கள். சட்ட தண்டனை என்பது அது சாதக பாதக ஒரு விதி. ஆனால் இவர்களுக்கு தார்மீக உதவி என்பது மனிதர்களால் மட்டுமே முடிந்த ஒன்று என்பதை சமூக வாதிகள் உணர்ந்து மனமுவந்து பணம் தந்து உதவுவது இனத்தின் கட்டாய கடமையாகும்.
1 வெள்ளி கிடைத்தாலும் 30 ஆயிரம் பேர்தான் தான் போதும். ஆனால் ஒருவரே உதவி செய்யும் பெருந்தகைகளை நம்மிடம் உண்டு. மனம்தான் காரணம். கோவிலுக்கும் குலத்துக்கும் கொட்டுவதை நிறுத்தி சமூக தியாகிகளுக்கு உதவ முன் வர அழைக்கிறோம். தொடர்புக்கு நாம் தமிழர் மலேசியா.
தமிழர் தேசியம் மலேசியா –016 6944223
இதுவரை 5 ஆதரவாளர்கள் முன் வந்துள்ளனர்…நாட்டில 100 தனித்தமிழன் போதும் 300 பேரு முப்பதுஆயிரம் ஆச்சு ! செம்பருத்திக்கு நன்றி ! வாழட்டும் தலைமுறை .
இங்குள்ள தமிழர்களின் பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி இருந்தால் நமது சமூகத்தின் கடமை எனலாம். நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்தோரை துடைத்தொழித்ததை இன அழிப்பு என கொழுப்படுத்து அலைந்ததை. சமூக கடமையா ? அல்லது சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பொறுப்பா என்ற ஆர்வத்தில் விடை தேடும் விளக்கெண்ணெய் இப்படியெல்லாம் நடக்கும் என்று அறியாத அறிவிலியா தமிழர் தேசியம் மலேசியா.
வன்முறை நமது கலாச்சாரம் கிடையாது ! மேலும் நாம் மலேசியர்கள் ,நாகரிகம் தெரிந்தவர்கள் ! ஒரு நாட்டு தலைவர் நமது நாட்டிற்கு வந்திருக்கும் பொழுது அதுவும் அரசாங்க அழைப்பில் வந்தவரை தாக்குவது என்பது நமது நாட்டிற்கு விளைவிக்கும் களங்கம் ! மலேசிய இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமானம் ! தமிழர்கள் ஒன்று கூடி எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்கள் என்றால் ! மலேசிய தமிழர்களின் ஆதங்கம் என்ன வென்று அரசாங்கத்திற்கு தெரிந்திருக்கும் ! சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டதின் விளைவு இது !! எப்படியோ PON RANGAN அவர்களும் வசூல் ராஜா ஆகிவிட்டார் ! சந்தோசம் ! ஏற்கனவே நாம் தமிழ் ஈழத்திற்கு அள்ளிக்கொடுத்ததிலும் ஊழல் !! இனி நாம் யாருக்கும் 1RM கூட கொடுக்க மனசு கிடையாது ! வசூல் ராஜாக்கள் நமக்கு சமுதாயத்தின் பெயரில் வச்ச ஆப்பு போதும் ! இனியும் கொடுக்கவும் ஒன்றும் இல்லை ! ஏமாறவும் தயாராக இல்லை !!
பேரை தமிழிலில் எழுதா குரைச்சல் இனமா ? அல்லது ஆங்கிலேய எல்சிசைன் க்கு இங்கு என்ன வேலை ?
\\\இங்குள்ள தமிழர்களின் பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி இருந்தால் நமது சமூகத்தின் கடமை எனலாம். நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் \\ நீ கொழுப்பு பிடித்த வடுக நாதாரிதான் , சும்மா மூடிகிட்டு போ !
தனித்தமிழர்களை வடுக நாதாரிகள் என்று எந்த ஆய்வில் உள்ளது நந்தா,…ஆஸ்ட்ரோ சீரியல் பார்த்து நீங்களுமா கேட்டு போயிட்டீங்க ? சுய ஆய்வே இல்லையா ? தமிழீழ தமிழர்கள்தாம் சிவனின் உண்மை பக்தர்கள் ..சிவநீசிம் அங்குதான் வாழ்கிறது. ஜப்னா தமிழர்களிடம் கேட்டு எழுதுங்கள்.
தமிழ் தேசியம் பேசுபவரே பெயரை ஆங்கிலத்திலும் கருத்தை தமிழிலும் எழுதும் தாங்களும் ஆங்கிலேய எல்சிசைன்தான் என்பதை கூடவா மறந்து விட்டீர்கள் ? எந்த மொழியில் பெயர் எழுதினால் என்ன ? கருத்துக்கள் தமிழில்தானே எழுதுகிறார்கள் . கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்குதாகிறதுதான் நமக்கு முக்கியம் என்ற கவுண்டமணியின் நகைச்சுவையை உங்களுக்கு நினைவு படுத்த வைத்து விட்டீர்கள் Pon Rangan !
மலேசிய தமிழர்கள் ஒன்று கூடி தங்களது ஆதங்கத்தை அரசாங்கத்திற்கு தெரிவிக்க தவறி விட்டார்கள் என்ற உங்கள் (s.maniam) கருத்தை வரவேற்கிறேன்.
இங்குள்ள தமிழர்களுக்காக போராடினால் மட்டும் அம்னோ அரசாங்கம் சும்மா விட்டுவிடுமா.அவர்களும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்கள் அந்த மூவரைப் போல.அதோடு அன்று அந்த முன்னாள் சிங்கள அதிபன் இங்கு மலேசியா அரசாங்கத்தின் மூலமாகவோ அல்லது விருந்தினராகவோ அல்ல.அப்படியே அரசாங்க விருந்தினராக வந்தாலும் அந்த கொலைகார குற்றவாளியை இந்த நாட்டிட்குள் நுழைய அரசாங்கம் அனுமதித்திருக்க கூடாது.இங்குள்ள தமிழர்களும் இந்த நாட்டின் பிரஜைகள்.அவர்களும் வரி செலுத்துகிறார்கள்.ஆகவே இந்த நாட்டு தமிழர்களின் உணர்வை அரசாங்கம் மதித்திருக்க வேண்டும்.இஸ்ரேல் நாட்டுஅமைச்சன் எவனாவது இங்கு வர முடியுமா? நமக்கு இன்னும் இன உணர்வு வரவில்லை என்பது இந்தப் பகுதிக்கு சில தருதலைகள் எழுதுவதிலிருந்து புரிகிறது.
தலைவணங்குகிறேன்
இந்நாட்டில் இன உணர்வை வைத்து பலர் சுயநலவாதிகளாக மாறியதை கண்டத்தின் பலன்தான் இன்றைய இன உணர்வு இல்லாமைக்கு காரணம்.
இந்தியன் என்றால் தமிழின் உணர்வு இல்லை..
சரி தமிழன் என்றால் தமிழனின் ஜாதி உணர்வு தமிழனின் இன உணர்வை மிஞ்சி விடுகிறதே…
இப்படிபட்ட சூழ்நிலையில் இன உணர்வு எப்படி வரும் ?
“இந்தியன் என்றால் தமிழின் உணர்வு இல்லை..
சரி தமிழன் என்றால் தமிழனின் ஜாதி உணர்வு தமிழனின் இன உணர்வை மிஞ்சி விடுகிறதே…
இப்படிபட்ட சூழ்நிலையில் இன உணர்வு எப்படி வரும் ? ” இது ரொம்பவே நல்லா வருதே ….