ஐரோப்பாவில் மீண்டும் ஒரு பயங்கரம்….! ஜேர்மன் தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டது

germanyஜேர்மன் தலைநகர் பெர்லினில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டு தாம் பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அரச தலைவியான ஏங்கெலா மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், 12 பேரின் உயிரை பலியெடுத்த இந்த சம்பவம் நிச்சயம் பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, குறித்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அந்நாட்டு பொலிஸார் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக கருதப்படும் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

எனினும், கைது செய்யப்பட்டுள்ளவர் தனக்கும் குறித்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, குறித்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இது ஒரு விபத்தாக இருக்க முடியாது எனவும், வேகமாக வந்த இந்த கனரக வாகனம் மக்களை நோக்கி செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நத்தார் தின சந்தையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com