14வது பொதுத் தேர்தல் மே மாதம் நடக்கலாம் : பாஸ் உதவித் தலைவர் ஆருடம்

pas vpபாஸ்   உதவித்    தலைவர்    இஸ்கண்டர்   சமட் ,  14-வது   பொதுத்    தேர்தல்   அடுத்த   ஆண்டு    மே   மாதம்     நடக்கலாம்     என    எதிர்பார்க்கிறார். அரசாங்கத்    துறைகளிடமிருந்தும்    இதர    மூலங்களிலிருந்தும்   கிடைத்த     தகவல்களைக்   கொண்டு    அவர்   அவ்வாறு   நினைக்கிறார்.

“பல்வேறு     கூட்டரசு   அரசாங்கத்    திட்டங்களின்   அமலாக்கத்தைப்   பார்க்கிறோம்.  இப்படிப்பட்ட      திட்டங்கள்   தேர்தல்   காலங்களில்தான்       அமல்படுத்தப்படுவது    வழக்கம்.

“தேர்தல்   ஆணையமும்    தேர்தல்     அதிகாரிகளுக்கு    விளக்கமளிப்பதற்கான   அட்டவணையை    வெளியிட்டிருப்பதாக    தெரிகிறது”,  என   இஸ்கண்டர்    நேற்று    ஓர்     அறிக்கையில்    கூறினார்.

ஜனவரிக்கும்  பிப்ரவரிக்குமிடையில்   சீனப்   புத்தாண்டுக்   கொண்டாட்டங்களின்போது   அரசியல்   பரப்புரைகள்     முடுக்கி  விடப்படும்      என்றவர்   எதிர்பார்க்கிறார்.