கேஎல்ஐஏ 2-ல் , சென்னையிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தின் டயர் வெடித்தது

air asia இன்று   காலை   6  மணிக்கு  சென்னையிலிருந்து   வந்த    ஏர் ஏசியா  விமானம்    கேஎல்  அனைத்துலக      விமான     நிலையம்  2-இல்     தரையிறங்கியபோது    அதன் டயர் வெடித்தது.

ஆனால்,  பயணிகள்   பணியாளர்கள்   எவருக்கும்  காயமேற்படவில்லை.  அனைவரும்   பத்திரமாக     விமானத்திலிருந்து   இறங்கிச்   சென்றதாக    விமான  நிறுவனத்தின்    அறிக்கை   ஒன்று     கூறிற்று.

“பயணிகளுக்கு   ஏற்பட்ட   அசெளகரியத்துக்கு     மன்னிப்பு  கோருகிறோம்”,,  என   அவ்வறிக்கை   கூறியது.

-பெர்னாமா