முன்னாள் ஏஜி அப்துல் கனிக்கு வழக்குரைஞராக அங்கீகாரம்

abd ganiபணி ஓய்வு  பெறுவதற்கு  மூன்று   மாதங்கள்   இருக்கும்போது   உடல்நலக்  குறைவின்  காரணமாக   பதவியிலிருந்து   விலக  நேர்ந்த     முன்னாள்   சட்டத்துறைத்   தலைவர்    அப்துல்   கனி  பட்டேலுக்கு  ஒரு  வழக்குரைஞர்   என்ற  அங்கீகாரம்  இன்று  வழங்கப்பட்டது.

அவரை   அங்கீகரிக்கும்   நிகழ்வுக்கு   கோலாலும்பூர்   உயர்  நீதிமன்ற   நீதிபதி   ஜான்  லூய்ஸ்  ஒ’ஹரரா   தலைமை   வகித்தார்.

அப்துல்  கனியை  வழக்குரைஞராக    அங்கீகரிக்க   வேண்டும்   என்று   கேட்டுக்கொள்ளும்   தீர்மானத்தை   முன்வைத்த    வழக்குரைஞர்   மன்ற   முன்னாள்   தலைவர்   கிறிஸ்டபர்  லியோங்   13  ஆண்டுகள்   ஏஜி-யாக  இருந்த   அவர்   வழக்குரைஞராவதற்கு  முற்றிலும்   தகுதி  படைத்தவர்    என்றார்.