சமுக வலைத்தளத்தில் தொழுகை அழைப்பையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்னை போலீசார் நேற்றிரவு தடுத்து வைத்தனர்.
செவ்வாய்க்கிழமை செய்யப்பட்ட ஒரு புகாரை அடுத்து நேற்றிரவு எட்டு மணிக்கு 26-வயது நிரம்பிய அப்பெண் குளுவாங் அருகில் சிம்பாங் ரெங்காம், தாமான் ரேகாமாஸில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டார் என ஜோகூர் போலீஸ் தலைவர் நஜ்முடின் முகம்மட் கூறினார்.
Ithu anaithu matangalukkum porunthuma
என்ன செய்வது முளையிலேயே , மரியாதையை கற்றுக்கொடுக்கவில்லை – யார் யாருக்கு ,எது எதற்கு, மரியாதை கொடுக்க வேண்டும் என்று பள்ளி பாடத்தில் தேய்ந்து விட்டது –
தொட்டதற்கு எல்லாம் அவமதிப்பு– இதெல்லாம் 1957 க்கு முன்பே நடைமுறைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும்– அப்போது வெள்ளைக்காரனையும் அவனுடைய கலாச்சாரத்தையும் தலைமேல் தூக்கி ஆடவில்லையா? அப்போது எங்கே இருந்தது அவ்வளவு தைரியம்? மடமையை பெருமை பேசும் நிலை இப்போது.