பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காண்கிறது

 

priceupபெட்ரோல் நிலயங்களில் ஜனவரியிலிருந்து ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை ஒரு லீட்டருக்கு 20 சென் உயர்வு காண்கிறது.

இந்த விலை ஏற்றத்தினால் ஒரு லீட்டர் ரோன்95 பெட்ரோல் ரிம2.10 க்கும், ஒரு லீட்டர் டீசல் ரிம2.05 க்கும் விற்கப்படும்.

ரோன்97 பெட்ரோல் விலை ஒரு லீட்டருக்கு 15 சென் உயர்ந்து ரிம2.40 க்கு விற்கப்படும்.

இந்த விலை ஏற்றம் இன்று நள்ளிரவிலிருந்து அமலுக்கு வருகிறது.