ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை..! வெளிப்பட்டது விடுதலைப் புலிகளின் மகத்துவம்

puli2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினம் தினம் நடைபெறும் குற்ற செயல்கள் இதனை நிரூபணம் செயவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரச இயந்திரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையே இவ்வாறு குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாகும்.

பொலிஸாரும் இவ்வாறன சம்பவங்களை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. இன அழிப்பு எதிர்நோக்கிய ஒரு சமூகம் மீண்டும் அதே போன்ற ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

இவ்வாறன தொடர் சம்பவங்கள் இதனை உறுதி செய்கின்றது. அரச இயந்திரம் வேண்டுமென்றே இவற்றை கடுப்படுத்த தயன்குகின்றதா.? என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றன.

புங்குடுதீவில் வைத்து பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். அத்துடன், காரைநகரிலும் கிளிநொச்சியிலும் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

தமிழ் சமூகம் என்றுமே எதிர்கொண்டிராத சமூக விரோத குற்ற செயல்களை தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னரான காலத்தில் எதிர்கொண்டு வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸார் மௌனம் காத்து வருகின்றனர்.

புங்குடுதீவு மாணவியினுடைய படுகொலை தீர்ப்பு உட்டப்படவில்லை. அதன் பின்னர் கிளிநொச்சி, காரைநகர் மாணவிகள் மரணம். நேற்றைய தினம் கர்ப்பிணி தாயின்படுகொலை.

இதுதவிர வெளியே தெரியப்டுத்தப்படாத பலபாலியல் வன்கொடுமைகள் என்பவற்றுக்கு எதிராக நாம் போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.

இந்த நிலையில் தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து எதிர்வரும் 27ஆம் திகதி காலை பணிபுறக்கணிப்பும், கதவடைப்பும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

காலை 9.00 தொடக்கம் 10.00 வரையான ஒரு மணிநேரம் பணிபுறக்கணிப்பும். கதவடைப்பும் மேற்கொள்ளுமாறு அனைத்து அரச மற்றும் தனியார்துறைகளை கேட்டுக்கொள்கின்றேன.

எனவே, சமூகபொறுப்புள்ள அனைத்து பிரஜைகளும் தங்களின் ஆதரவை வெள்ளிக்கிழமை ஒருமணி நேரபணி புறக்கணிப்பையும் கதவடைப்பையும் மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: