போருக்கு பின்னர் தமிழரின் கலை, கலாச்சாரம் மழுங்கடிக்கப்படுள்ளது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி பருத்தித்துறை கலாச்சார மத்திய நிலைய திறப்பு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் கலை கலாச்சாரம் காலம் காலமாக எப்படி பேணி பாதுகாக்கப்பட்டு இருந்தது என்பது நமக்கு தெரியும்.
ஆனால் போருக்கு பின்னர் எங்களுடைய கலை, கலாச்சாரம் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது.
ஆலயங்களில் உள்ள சிலைகளை உடைத்துக் கொண்டு சென்றிருக்கின்றார்கள்.
கோவில்கள் உடைக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் எத்தனையோ கோவில்கள் பூட்டப்பட்ட நிலையில் விளக்கு எரியாத நிலையில் உள்ளன.
இது எங்களுடைய கலை கலாச்சாரத்தை வளர்க்கின்ற விடயத்தில் பாரிய இலக்காக இருக்கின்றது. தமிழருடைய கலை கலாச்சாரத்திற்கு யுத்தத்திற்கு பின்னர் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
மட்டக்களப்பில் கடந்த மாதம் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு இருந்தன. யாழ்.மாவட்டத்திலும் சரி கிளிநொச்சி மாவட்டத்திலும் சரி இப்படியான கலாச்சார சீரழிவுகள் நடந்து கொண்டு வந்தன.
ஆனால் அவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது உரையில் தெரிவித்தார்.
-http://www.tamilwin.com