கடந்த வாரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மரணமடைந்த எஸ்.பாலமுருகன் உடல்மீது இரண்டாம் முறையாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
பாலமுருகனின் இளவல் எஸ். பால்ராஜ் கேட்டுக்கொண்டதைப் போல் இரண்டாவது சவப் பரிசோதனையை கோலாலும்பூர் மருத்துவமனையில்(எச்கேஎல்) செய்வதற்கு நீதிபதி அஸ்மான் உசேன் அனுமதி அளித்தார்.
அரசுத்தரப்பு வழக்குரைஞர் டிபிபி பக்கிஸா அபு பக்காரும் அதை எதிர்க்கவில்லை.
அடுத்து, பாலமுருகனின் உடலை தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையிலிருந்து பெறுவதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்படும் என்று அக்குடும்பத்தாரின் வழக்குரைஞர் என்.சுரேந்திரன் கூறினார்.
“விரைவில் உடலை எச்கேஎல்-லுக்குக் கொண்டு செல்வோம்”, என்றாரவர்.