சவப் பரிசோதனை செய்வதற்கென மலேசியாவில் சில நடைமுறைகள் இருப்பதை வட கொரியா மதிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் வலியுறுத்தினார்.
வட கொரியா தலைவர் கிம் ஜோங்- உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் ஜோங் – நாம் இறந்தது மலேசியாவில் என்பதால் இறப்பு தொடர்பான சோதனைகளையெல்லாம் செய்ய வேண்டி இருப்பதாக அவர் சொன்னார்.
“இதை வட கொரியா நிராகரிக்கலாம் அல்லது ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆனால், நாம் சட்டப்படிதான் நடந்து கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் ஒன்று நடந்துள்ளது. அதை அவர்களின் சட்டப்படி ஆராய முடியாது.
“இறப்பு அல்லது கொலை நம் நாட்டில் நிகழ்ந்தால் அதை விசாரிப்பதற்கென நடைமுறைகள் உண்டு. தடயவியல் மருத்துவ விசாரணையை முடிக்கக் குறுக்குவழி எதுவும் கிடையாது”, என்று அவர் இன்று செர்டாங்கில் கூறினார்.
அடுத்தவனுக்குனா உடனே உன் திருவாய் மலர்ந்து பேசிடுவாய் ! இந்திய சமுதாயத்துக்குனா உன் தொண்டை அடைபட்டுவிடும் !!
அவர்கள் சட்டப்படி ஆராய முடியாது என்பது உண்மை தான். ஒரு வேளை உங்களுக்கு சட்டப்படி ஆராய தெரியாது என்று அவர்கள் நினைக்கலாம் அல்லவா!
………..சுப்ரா தமிழனுக்கு ஆப்பு வைப்பவன்……………
எல்லாமே நம் சாபக்கேடு — நமக்கு வாய்க்கும் தலைகள் எல்லாமே உருப்படாத சப்பிகள். நமக்காக ஒன்றும் நடக்காது.
சிறையில் இந்தியர்கள் மரணம் உங்கள் ஆதங்கம் எங்கே? போதும் உங்கள் நாடகம்.
வாயாலே வடை சுட கத்துகிடடார் சுப்ரா ….