பரபரப்பில் பிரான்ஸ்! ஒரே இடத்தில் ஒன்றரை லட்சம் பேர் கூடினர்!

france_traces_001இனவெறி தாக்குதல் நடத்தும் பொலிசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற மிக பெரிய போராட்டத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இந்த மாத தொடக்கத்தில் Theo (22) என்னும் கருப்பினத்தை சேர்ந்த இளைஞன் பொலிசாரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நபர், தற்போது Theo மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட பொலிசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது

பொலிசாரின் இந்த செயலை கண்டித்தும், இனவெறி தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தும் நேற்று மத்திய பிரான்ஸில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அதில் பலர் பாதிக்கப்பட்ட இளைஞர் Theoவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பதாகைகள் ஏந்தி கோஷம் போட்டார்கள்.

ஒரே இடத்தில் இவ்வளவு பேர் கூடியதால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.

-http://news.lankasri.com

https://youtu.be/GOV_j1oObrg

TAGS: