சிலாங்கூர் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மொகமட் மொக்தார் அஹமட் டஹ்லான் , 73, இன்று அதிகாலை 3.34 மணியளவில் ஷா ஆலம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
மொக்தார், 1999-இலிருந்து 2008வரை இரண்டு தவணைகளுக்கு கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினராகவும் வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் குடிசை விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.