பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் எந்துலு பெலாவுன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு சரவாவின் 31 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார்.
மாநில பிஎன் கட்சிகள் சேகரித்துள்ள உளவுத் தகவல்கள் அப்படி ஒரு நம்பிக்கையைத் தருவதாக பார்டி ரக்யாட் சரவாக் (பிஆர்எஸ்) துணைத் தலைவரான எந்துலு கூறினார்.
“ஆனால், 31 நாடாளுமன்ற இடங்களில் 29 இடங்களை வெல்வது நடைமுறை சாத்தியமானதே”, என்றவர் சொன்னதாக த போர்னியோ போஸ்ட் கூறியது.
இப்போது பிஎன் 21 இடங்களையும் டிஏபி ஐந்து இடங்களையும் பிகேஆர் ஓர் இடத்தையும் வைத்துள்ளன.