இவ்வாண்டின் முதல் காலாண்டில் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் 23,583 பேரிடம் சோதனை செய்ததில் அவர்களில் 825 பேர் போதைப் பொருள் உட்கொள்வது தெரிய வந்ததாக உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார்.
அவர்களில் சிலர் போதைப்பொருள்களை விற்பனை செய்தும் வருகிறார்கள்.
“அவர்களைப் பிடிப்போம். பள்ளீகளில் போதைப்பொருள் பிரச்னையை ஒழித்துக் கட்டும் பொறுப்பு தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரிய(ஏஏடிகே)த்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது”, என நூர் ஜஸ்லான் கூறினார்.