பாஸ் , கெடா, அலோர் ஸ்டாரில் நடைபெறும் அதன் ஆண்டுக் கூட்டத்தில் பிகேஆருடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முடிவு செய்திருந்தால் சிலாங்கூர் அரசில் அந்த இஸ்லாமிய கட்சி வைத்துள்ள பதவிகளையும் துறக்க வேண்டும்.
பிகேஆரின் உறவுகள் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டால் அதுதான் பாஸ் அடுத்துச் செய்யக் கூடிய “மதிக்கத்தக்க, கண்ணியமிக்க” காரியமாக இருக்கும் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
“அமனாவுடனும் டிஏபியுடனும் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட ஒரு கட்சி பிகேஆருடன் ஒத்துழைப்பதையும் நிறுத்திக்கொள்வது குறித்து சிலாங்கூர் மாநில அரசில் இருந்துகொண்டே யோசிப்பது நியாயமாகப் படவில்லையே”, என சைபுடின் ஓர் அறிக்கையில் கூறினார்.
“எனவே, பாஸ் முக்தாமாரின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கிறேன். அதே வேளையில் , நஜிப் நிர்வாகத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் எல்லாக் கட்சிகளுடனும் பிகேஆர் தொடர்ந்து ஒத்துழைக்கும்”, என்றாரவர்.
பாஸ் எப்போதுமே பாஸ் மார்க்கு வாங்காது.
சூடு சொரணை இருந்தா வெளியாக வேண்டும். நல்லா தின்னு ருசி கண்டவனுங்க எப்படி வெளியே போவானுங்க…?