காலஞ்சென்ற பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிசின் மருமனார், அப்துல் அரிப்பாமி அப்ட் ரஹ்மான், பார்டி அமனா நெகரா(அமனா)வுக்கு கிளந்தானில் ஒரு வாக்குக்கூட கிடைக்காது என்று உறுதியாகக் கூறுகிறார்.
மாச்சாங் பாஸ் தகவல் தலைவரான அவர், கிளந்தானை பாஸ் தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்புகிறார்.
“அமனா கிளந்தானில் ஒரு இடத்தைக்கூட வெல்லப்போவதில்லை.
“கிளந்தானுக்கு வெளியில் அவர்கள் டிஏபி-யை நம்பி இருக்கிறார்கள். டிஏபி அவர்களுக்குக் கொடுக்கும் தொகுதிகளில் அவர்கள் வெல்லக்கூடும்”, என்றவர் மலேசியாகினியிடம் நேற்று அலோர் ஸ்டாரில் தெரிவித்தார்.
கிளந்தானில் அமனாவுக்கு 1000 வாக்கு அல்லது 100 வாக்குகூட கிடைக்காது என்று கூறினாலும்கூட நம்பலாம்.
ஆனால் ஒரு வாக்குக்கூட கிடைக்காது என்று கூறும் இப்படிபட்ட அறிவிலியை மருமகனாக அடைந்தது, காலஞ்சென்ற பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிசின் துரதிஷ்டம் எனலாம்.