தாம் ஆற்றிய உரை குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷாவுக்கு விளக்கம் அளிக்கும் கடிதம் இன்னும் தயாரிப்பு நிலையில் இருப்பதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா தெரிவித்தார்.
“நான் விரைவில் கடிதம் எழுதுவேன். அது தயாரிக்கப்பட்டு வருகிறது”, என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சந்தித்த போது அவர் கூறினார்.
ஆனால், அக்கடிதத்தில் இடம்பெற்றுள்ள விபாங்கள் குறித்து எதுவும் கூற அவர் மறுத்து விட்டார்.
கடந்த புதன்கிழமை கம்போங் மெலாயு சுபாங்கிலுள்ள அன் நூர் மசூதியில் சிவராசாவை பேசுவதற்கு அனுமதித்ததற்காக அம்மசூதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரங்கள் இலாகாவுக்கு (ஜாயிஸ்) சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து சுல்தானுக்கு விளக்கம் அளிப்பதற்காக ஒரு கடிதம் எழுதப் போவதாக சிவராசா கூறியிருந்தார்.
அந்த மசூதியில் தாம் அரசியல் உரையாற்றியதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் கூறியிருந்ததை சிவராசா கண்டித்தார்.
“நான் அரசியல் பேசினேன் என்ற தவறான அறிக்கையை கு நான் (தெங்குஅட்னான்) மீண்டும் தவறாக கூறுகிறார். நான் இதற்கு விளக்கம் அளித்துள்ளேன். தவறான அறிக்கையை மீண்டும் கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும்”, என்றார் சிவராசா.
தாம் ஆற்றிய உரை குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷாவுக்கு விளக்கம் அளிக்கும் கடிதம் இன்னும் தயாரிப்பு நிலையில் இருப்பதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா தெரிவித்தார்.
முஸ்லிம்களின் உணர்வை மதிப்பது போல மற்ற இனத்தவர்களையும் மதிப்பது அவசியம் .
1970 க்கு முன் சுல்தான்கள் இப்படி பேசி இருப்பார்களா? எல்லாம் காலத்தின் கட்டாயம். சுல்தான்கள் தான் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- ஆனால் இப்போது இதுபோல் பேசினால்தான் தங்களின் அடையாளத்தை நிலை நிறுத்த முடியும் போல் இருக்கிறது.