அல்கொய்தா தீவிரவாதிகளின் குறி

Kashmir-Mapகாஷ்மீர் மக்களை வதைக்கும் அனைத்து இந்திய ராணுவ வீரர்கள் தான் தங்களது குறி என அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், உள்ளூர் இளைஞர் ஒருவரை, ராணுவத்தினர் மனித கேடயமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், காஷ்மீர் சகோதரர்களை வதைக்கும் அதிகாரிகள் தான் தங்களது குறி என அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், இந்து மத தலைவர்களும் தான் தங்கள் குறி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அல்கொய்தாவின் எச்சரிக்கை அறிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-lankasri.com

TAGS: