1எம்டிபி-தொடர்பு நிதிகளில் குற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கின்றனாவா என்று புலனாய்வு செய்யும் அமெரிக்க விசாரணை அதிகாரி பிரச்னைகளை எதிர்நோக்குவதாக அமெரிக்காவின் புளூம்பெர்க் ஊடகம் கூறியது. காரணம், உத்தேச சாட்சிகள் சிலர் வாயைத்திறந்து பேசுவதற்கே அஞ்சுகிறார்களாம்.
புலனாய்வுக்கு உதவியாகவுள்ள “குறிப்பிட்ட நாடுகளில் உள்ள” சிலர் தங்கள் சுயப் பாதுகாப்பு குறித்து பயப்படுகிறார்கள், மற்றும் சிலர் ஒத்துழைப்பது ஆபத்து என ஒதுங்கிக் கொள்கிறார்கள் என கூட்டரசு புலனாய்வுத்துறை (எப்பிஐ) நேற்று லாஸ் ஏஞ்சல்சில் கூட்டரசு நீதிமன்றத்தில் ஒரு மனுவைப் பதிவு செய்தபோது கூறியது.
“Cash is King” தமக்கு தீங்கிழைக்க எண்ணுவோர் எவரையும் எமலோகம் அனுப்பிவிடுவார் ! C4 வெடிகுண்டு, துப்பாக்கித் தோட்டா, “சிமெண்ட்” தோம்பு போன்ற பல்வகையான தண்டனையிலிருந்து தப்பமுடியாது. படைத்தல் , காத்தல் , அழித்தல் என்று அனைத்தையும் அவர் ஒருவரே கவனித்துகொள்கிறார். உயிரின்மீது ஆசையிருந்தால் , அவரைச் சீண்டாதீர்கள்.
‘இந்தியன் தாத்தா’ என்று ஒன்றை இங்கே…….ம்…..ஊஹும்…