மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலேசியப் பொருளாரத்துக்குக் குழிபறிக்க 1எம்டிபி-க்கு எதிராக சதிவேலைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாகக் கூறினார்.
அதன் முடிவான நோக்கம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதுதான் என்றாரவர். நஜிப், நேற்றிரவு யுஎஸ்- ஆசியான் வணிக மன்றமும் அமெரிக்க வர்த்தகச் சங்கமும் கலந்துகொண்ட ஒரு விருந்தில் உரையாற்றினார்.
“மலேசிய பொருளாதாரம் பற்றி, குறிப்பாக 1எம்டிபி குறித்து தப்புத் தப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
“நாங்கள் எதையும் மூடிமறைக்க விரும்பவில்லை. நாட்டின் வரலாற்றில் முன் எப்போதுமில்லாத வகையில் விசாரணைக்கு உத்தரவிட்டோம்.
“சில குறைபாடுகள் இருப்பது தெரிந்ததும் நிறுவனத்தின் சீரமைப்புக்கு உத்தரவிட்டேன். அது நன்கு நடைபெற்று வருகிறது. 1எம்டிபி முன்பு வைத்திருந்த சொத்துகளின் மதிப்புக் கூடியுள்ளது”, என நஜிப் கூறியதாக என்எஸ்டி ஆன்லைன் கூறியது.
ஆனால், எதிரணியினர் இவ்விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கி விட்டார்கள் என்று கூறிய அவர், எதிரணியினர் போடும் “சத்தத்துக்கு”க் காதுகொடுக்க வேண்டாம் என்று முதலீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
“சில பிரச்னைகள் இருந்தது உண்மைதான். ஆனால், எதிரணியினர் அவற்றைப் பெரிதுபடுத்தி விட்டனர்”, என்றார்.
தேர்தல்களில் அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சி தோல்வி அடையவே அந்த நிறுவனத்தைக் கவிழ்க்கவும் அதன்வழி முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குக் குழிபறிக்கவும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றாரவர்.
1MDB-ப் “பயன்படுத்த” வழிகாட்டியது யார்? நெருப்பில்லாது புகையாது!
திருடிய திருடனே திருடனைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளானாம் ! இதை நம்பவேண்டுமாம். !!!……….நம்பிவிட்டோம்.
இந்த பொய்க்காரன் பொய்யை விடாமல் சொல்லி உண்மையாக்க முயல்கிறான்– என்ன செய்வது அவன் கை இப்போது ஓங்கியே இருக்கிறது. இன வெறியும் மத வெறியும் இருக்கும் வரை அவன் காட்டில் மழைதான்.
ஒரு பொய்யை பலமுறை கூறினால் உண்மையாகி விடும் என்று நிரூபிக்க நஜிப் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் வேறொன்றும் இல்லை.