சபா மற்றும் சரவாக், மலேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ளதில் அதிருப்தி அடைந்திருக்கும் அம்மாநில மக்களின் மனோநிலையை ஆய்வு செய்யவுள்ளதாக, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் உறுதியளித்துள்ளார்.
“நிறைய பேர் மகிழ்ச்சியாக இல்லை. 1963 மலேசிய உடன்படிக்கையை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.”
“அனைத்தையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும், சரவாக்கில் 16 விஷயங்கள், சபாவில் 20 விஷயங்கள்,” என சரவாக்கில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகாதீர் அவ்வாறு கூறினார்.
இன்றிரவு, மகாதீர் கூச்சிங்கில் ஒரு கூட்டத்தில் பேசவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு தனித்த ஒரு தேர்தல் அறிக்கையைத் தயார் செய்துள்ளதாகத் தெரிகிறது. அதனோடு அம்மாநில மக்களின் அதிருப்தி தொடர்பாகவும் ஆய்வு செய்து, ஒரு தீர்வைக் கொடுக்க ஹராப்பான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“பெட்ரோலியம், கல்வி உட்பட பல விஷயங்களில் அவர்களுக்கு மனநிறைவு இல்லை. நாம் அவை குறித்து ஆய்வுகள் செய்வோம், திறந்த மனதோடு அதனை நாம் அணுகுவோம்,” என மகாதீர் உறுதியளித்தார்.
இம்முறை பொதுத் தேர்தலில் அதிகமான தொகுதிகளை வெல்ல முடியுமென ஹராப்பான் நம்புவதாக மகாதீர் தெரிவித்தார்.
எத்தனை தொகுதிகளைக் கைப்பற்ற ஹராப்பான் எண்ணம் கொண்டுள்ளது எனக் கேட்டப்போது, அரசாங்கத்தை கைப்பற்றி, ஆட்சியமைக்கும் அளவுக்கு நாற்காலிகளைப் பிடிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாரிசானின் தீவிர ஆதரவு கட்சியான, பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து சரவாக் கட்சி தலைமையையும் அம்முன்னாள் பிரதமர் சந்திக்கவுள்ளதாக தெரிகிறது.
“நான் அவர்களுடன் பேச விரும்புகிறேன், அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ தெரியவில்லை. எல்லோரும் இப்போது வெட்கப்படுகிறார்கள், முன்பெல்லாம் நான் வந்தால் என்னை வந்து சந்தித்து செல்வார்கள். இப்போது அவர்களுக்கு சில கட்டுபாடுகள் உண்டு போலும்,” என்றார் அவர்.
சரவாக்கில் அதிகமான தொகுதிகளைப் பிடிக்க, பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து சரவாக் கட்சியை ஹராப்பானுடன் இணைக்க விரும்புகிறார, எனக் கேட்டதற்கு மகாதீர் அவ்வாறு பதிலளித்தார்.
6 லட்சம் பிலிப்பின் ஜுலு (ZULU ) வந்தேறிகளுக்கு ic கொடுத்துசபா மக்களின் நிம்மதியை கெடுத்த ஈனப்பிறவி நீ .இங்கே இந்திய சமுதாயத்தின் படிப்பிலும்,வேலைவாய்ப்புகளிலும்,பொருளாதாரத்திலும் கைவைத்த கயவன் நீ .நீ சாவதற்க்கு முன்னாள் மானமிழந்து,மரியாதை இழந்து,உன் பொண்டாட்டி பிள்ளைகள் இழந்து தொழுநோய் வந்து பிறகு சாகவேண்டும் .
மகாதீர் 6 லட்சம் பிலிப்பின் ஜுலு (ZULU ) வந்தேறிகளுக்கு ic கொடுத்து சபா மக்களின் நிம்மதியை கெடுத்தது, கடந்த காலம்.
நஜிப் 3.5 லட்சம் வங்காளதேசிகளுக்கு ic கொடுத்து இந்நாட்டில் வாழும் இந்தியர்களின் நிம்மதியை கெடுக்க நினைப்பது நிகழ்காலம்.
கடந்த கால தவறைவிட நிகழ்கால தவறுதான் இந்தியர்கள் நினைத்து பார்க்க இயலாத அளவுக்கு பெரிய ஆப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
TAPAH BALAJI,RAHIM A S S நீங்கள் கூறுவது போல நம் நாடு, கல்வியிலோ பொருளாதாரத்திலோ முன்னேறவில்லை என்றாலும், இந்தியர்களுக்கு ‘ஆப்பு’ வைப்பதில் முன்னேறிவிட்டது.