“இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றவை போர்க்குற்றங்கள் அல்ல. அவை, சிறு குற்றங்களே. ஆகவே, போர்க்குற்றங்கள் என்று கூறுவதை அனைவரும் கைவிட வேண்டும்.” என்று முன்னாள் அமைச்சரான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதவது, “தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை தேடித் தந்தது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமே. ஆகவே, எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்க வேண்டும். அதனூடு பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். குறிப்பாக, காணாமல் போனவர்கள் தொடர்பிலான விடயங்களுக்கு தீர்வு காணுவோம்.” என்றுள்ளார்.
-puthinamnews.com
இவனைப்போன்ற கம்மனாட்டிகளை என்ன செய்வது?
இவனைப்போன்ற இனங்கள் இன்றைய உலகில் பெருத்து போய்விட்டனர்.
இந்திய ஆட்சியாளர்களின் அரவணைப்பும் ஆதரவும் என்றும் இவர்களுக்கு இருக்கும் போது இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். இந்தியாவின் ஆதரவு என்றால் இயல்பாகவே வல்லரசு நாடான ரசிய நாட்டின் ஆதரவும் இவர்களுக்கு கிடைக்கும். இதுநாள் வரை இப்படித்தான் நடந்துக் கொண்டு வருகின்றது. ஏனென்றால் இந்தியாவும் ரஷியாவும் இருவரும் கட்டிப் பிடித்துக் கொள்ளும் அளவிற்கு நெருங்கிய நட்பு நாடுகள். இலங்கை ராணுவத்தால் சுமார் 1½ லட்சம் குற்றமற்ற மக்கள் கொடூரமான இந்த ராணுவத்தால் கொல்லப் பட்டது இவர்களுக்கு சின்ன விஷயம். இந்த லட்சணத்தில் இந்தியாவும் இலங்கையும் ஐ நா மனித உரிமை ஆணையத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட மரியாதைக்குறிய நாடுகள்.
பாக்கிஸ்தானுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த
ஜின்னாவின்தீர்க்கதரிசனம்,அன்றைய
தமிழ் தலைவர்களு இல்லாமையே,
எலிசபத் ராணியோடு நல்ல நட்புடன்
இருந்த தமிழ்தலைவர்களுகு தீரக்கதரிசம்
இல்லாமையே,இன்றைய அவலத்திற்கு
மூலகாரணம்,தமிழகத்தும் பொருந்தும்,,,!!!